Raghu Thatha OTT: பாக்ஸ் ஆபிஸில் டம்மியான ரகு தாத்தா.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆகஸ்ட் 15ந் தேதி சுகந்திர தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியானத் திரைப்படம் தான் ரகு தாத்தா. இந்த படம் வெளியான போது, தங்கலான், டிமான்டி காலனி 2 என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களும் வெளியேனதால், ரகு தாத்தா திரைப்படம் எதிர்பார்த்ததை வசூல் பெற முடியாமல் திணறியது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேரடியாக தமிழில் தயாரித்த முதல் திரைப்படம் 'ரகு தாத்தா'. பெரும் வரவேற்பை பெற்ற 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இதில், நடிகை கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரகு தாத்தா: வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் கீர்த்தி சுரேஷ், முற்போக்குக் சிந்தனை கொண்ட பெண்ணாக வலம் வருகிறாள். இந்த சிந்தனைகளை வைத்து கதை எழுதி வருகிறார். திடீரென இவரது தாத்தா எம்.எஸ்.பாஸ்கருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருவதால், கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார். திருமணத்தில் விருப்பமில்லாத கீர்த்தி, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளைப் பிடிக்காததால், தனது கதைகளை விரும்பும் முற்போக்கு சிந்தனை கொண்ட ரவீந்திர விஜய்யை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.
படத்தின் கதை: ஆனால், அதன் பின்பு அவரின் சுயரூபம் தெரியவர, திருமணத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் கீர்த்தி சுரேஷூக்கு ஏற்படுகிறது. இதற்கிடையே இந்திக்கு எதிராகப் போராடும் அவருக்கு அதைக் கற்கவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.[i]இப்படி அடுத்தடுத்து வாழ்க்கையில் வந்த சிக்கல்களை கீர்த்தி சுரேஷ் எப்படி எதிர் கொண்டார், திருமணம் நடந்ததா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.
ஓடிடியில் ரிலீஸ்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் இதுவரை ரூ. 35 கோடி வசூல் செய்தநிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்திரைப்படம், செப்டம்பர் 13ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டரில் டல்லடித்த இப்படத்திற்கு ஓடிடியில் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் ரிவால்வர் ரீட்டா மற்றும் வருண் தவானுக்கு ஜோடியாக பேபி ஜான் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











