தியேட்டரில் மொக்கை வாங்கிய ரிவால்வர் ரீட்டா.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானத் திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. இப்படத்தின் ஓடிடி எப்போது வெளியாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் "இது என்ன மாயம்" படத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, தமிழில் தொடரி, ரொமொ, பைரவா என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடம் பிடித்தார். இவர் ஹீரோயினாக நடிப்பதை தாண்டி கதையின் நாயகியாக மகாநட்டி, பெண்குயில், ரகு தாத்தா, சாணி காயிதம் போன்ற படங்களில் கதையின் முக்கியத்துவம் கொண்ட சோலோ ஹீரோயினாக கலக்கி வருகிறார்.

keerthy suresh revolver rita ott
Photo Credit:

நடிகை கீர்த்தி சுரேஷ்: தெறி இந்தி ரீ மேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 28ந் தேதி வெளியானது. ஜே. கே. சந்துரு இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடிங் கிங்ஸ்லி, சென்ட்ராயன் ஆகியோர் நடித்திருந்தனர். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

ஓடிடி ரிலீஸ் தேதி: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ 75 லட்சத்தை வசூல் செய்தது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் படம் திரையிட்ட தியேட்டர்களில் அடிவாங்கி படத்தின் மொத்த வசூல் ரூ. 5 கோடியை மட்டுமே எட்டியது. தற்போது 'ரிவால்வர் ரீட்டா' படம் வருகிற 26ந் தேதி நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவறவிட்ட ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X