Youth OTT: கென் கருணாஸின் 'யூத்' ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் திரைப்படம் தியேட்டரில் சக்கை போட்டு வருகிறது. ஒரு பக்கத்தில் பாலிவுட் நடிகர் நடித்த துரந்தர் பட்டையை கிளப்பி வரும் நிலையில், தமிழகத்தில் யூத் படத்தை பள்ளி,கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் உத்தேச ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்த கருணாஸின் மகனுக்கு திரும்பு முனையாக அமைந்தது வெற்றிமாறனின் அசுரன். அந்த படத்தில் தனுஷின் மகனாக நல்ல படிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது கென் கருணாஸ் இயக்குநராக மாறி 'யூத்' படத்தை இயக்கி அதில், நாயகனாவும் நடித்துள்ளார். மார்ச் 19ந் தேதி வெளியான இத்திரைப்படம் பள்ளி பருவத்தில் மனத்தில் பூக்கும் காதலை சொல்லும் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Youth Ken Karunas OTT

யூத் கதை: 11ஆம் வகுப்பு படிக்கும் கென் கருணாஸ், காதலிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் பள்ளியில் காதலியை தேடி அலைகிறான். அதே தேடல் கல்லூரியிலும் தொடர்கிறது. ஆனால், எந்த பெணும் கென் கருணாஸின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் தான் மீனாட்சிக்கும் கென்னுக்கும் இடையே காதல் மலர்கிறது. மீனாட்சி விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட, அந்த நேரத்தில் சோனல் என்கிற பெண் கென்னிடம் காதலை சொல்கிறாள். கண்ணா லட்டு தின்னா ஆசையா என்கிற கதையாக கென் அந்த காதலையும் ஏற்றுக்கொண்டு சோனலையும் காதலிக்கிறான். இந்த விஷயம் மீனாட்சிக்கு தெரியவர பிரேக்கப் செய்கிறாள். அதன் பின் கென், சோனலின் காதல் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

ஓடிடி ரிலீஸ்: கலகலப்பாக இந்த காலத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பிடித்தமான காதல் கதையாக இருப்பதால், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரூ 3கோடியை வசூலித்தது. தொடர்ந்து படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், இப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் யூத் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த உத்தேச தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த படம் ஏப்ரல் 10ந் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X