Youth OTT: தியேட்டரில் சக்கைக்போடு போட்ட 'யூத்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு? எப்போ தெரியுமா?
சென்னை: கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் திரைப்படம் தியேட்டரில் மாஸ் காட்டிய
யூத் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கருணாஸின் மகன் கென்னுக்கு திரும்பு முனையாக அமைந்த திரைப்படம் வெற்றிமாறன் இயக்கிய அசுரன். அந்த படத்தில் தனுஷின் மகனாக கென் நடித்து அனைவர் இடத்திலும் பாராட்டை பெற்று இருந்தார். நடிகராக கலக்கி வந்த கென் கருணாஸ் இயக்குநராக மாறி 'யூத்' படத்தை இயக்கி அதில், நாயகனாவும் நடித்துள்ளார். கடந்த மாதம் மார்ச் 19ந் தேதி வெளியான இப்படம் பள்ளி பருவத்தில் வரும் காதலை சொல்லும் படமாக இருந்ததால் இந்த காலத்து இளசுகள் இந்த படத்தை கொண்டாடினார்கள்.
'யூத்' சுவாரசியமான கதை : பள்ளியில் சுமாராக படிக்கும் கென் பத்தாம் வகுப்பில் அனைத்து படத்திலும் 35 எடுத்து தட்டுத்தடுமாறி பாஸ் ஆகிவிட்டார். இதையடுத்து,
11ஆம் வகுப்புக்கு வரும் கெனுக்கு ஒரே ஒரு குறிக்கோள், காதலிக்க வேண்டும், காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளியில் காதலியை தேடி அலைகிறான். ஆனால், எந்த பெணும் கென் கருணாஸின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் தான் மீனாட்சிக்கும் கென்னுக்கும் இடையே காதல் மலர்கிறது.

பிரேக் அப்: மீனாட்சி விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட, அந்த நேரத்தில் சோனல் என்கிற பெண் கென்னிடம் காதலை சொல்கிறாள். கென் சோனத்தின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அந்த பெண்ணுடன் நெருங்கி பழகுகிறான். இந்த விஷயம் மீனாட்சிக்கு தெரியவர பிரேக்கப் செய்கிறாள். உடனே நீ போனா என்னடி எனக்கு சோனல் இருக்கா, நான் அவளை காதலிப்பேன் என்று சொன்ன போது தான், இவை அனைத்தும் கென்னுக்கு எதிரானவர்களின் வேலை என்பது தெரியவருகிறது.அதன் பின் கென்னின் காதல் என்ன ஆனது.. மீண்டும் கென்னின் வாழ்க்கையில் அனிஷ்மா அனில்குமார் எப்படி வந்தார் என்பது தான் யூத் படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ்: இந்த காலத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்றபடி காதல், பிரேக் அப், மீண்டும் ஒரு காதல் என படத்தை கென் கருணாஸ் நல்ல கலகலப்பாக கொண்டு சென்றதால், படம் வெளியான முதல் நாளிலேயே ரூ 3கோடியை வசூலித்தது. தொடர்ந்து படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனம் கிடைத்து வந்ததால் படம் வெற்றிப்படமாக அமைந்தது நல்ல வசூலை அள்ளியது. இந்நிலையில் யூத் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த படம் ஏப்ரல் 16ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறியவர்கள் நிச்சயம் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











