Kerala govt OTT: கேரள அரசின் புதிய ஓடிடி தளம்.. இந்தியாவிலேயே இதுதான் முதல் முயற்சி!
திருவனந்தபுரம்: விருப்பத்திற்குரிய படங்களை விருப்பமான நேரத்தில் விருப்பமான இடத்தில் பார்த்து மகிழலாம் என்பதே ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு கொடுக்கும் சாய்ஸ். அந்த வகையில் குடும்பத்தினருடன் பார்த்தாலும் அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டியது இல்லை என்பது ஓடிடி தளங்களின் கொடை. அந்த வகையில் கொரோனா காலத்தில் ஓடிடி தளங்கள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தன. மக்கள் வீட்டிலேயே முடங்கிய சூழலில் அதிகமான படங்களை இந்த தளங்கள் வாயிலாக பார்த்து மகிழ்ந்தனர். இந்த தளங்கள் அனைத்துமே தனியாருக்கு சொந்தமானதாகவே இருந்து வருகின்றன. இந்தியாவில் அதிகமான ஓடிடி தளங்கள் இருந்தாலும் ரசிகர்கள் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு விதமான அவரவர்களுக்கு பிடித்தமான படங்களை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த ஓடிடி தளங்கள் அரசுக்கு சொந்தமாக செயல்பட முடியுமா என்பதை தற்போது கேரளா அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. சி ஸ்பேஸ் என்ற இந்த அரசு உரிமம் பெற்ற ஓடிடி தளம் இன்றைய தினம் முதல்வர் பினராயி விஜயனால் திருவனந்தபுரத்தில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. நமக்கு விருப்பமான படங்களை விருப்பமான சூழலில் பார்ப்பது தான் ஓடிடியின் அடிப்படை என்ற வகையில் அரசு உருவாக்கியுள்ள இந்த ஒடிடி தளம் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான படங்களை கொடுக்கும் இதில் ஏதேனும் கட்டுப்பாடுகள் இருக்குமா என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ஓடிடி தளம் மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஓடிடி தளங்கள்: திரைத்துறையின் முக்கியமான வளர்ச்சியாக ஓடிடி தளங்கள் பார்க்கப்படுகின்றன. தாங்கள் நினைக்கும் நேரத்தில் நினைக்கும் இடங்களில் மொபைல் மூலமாகக்கூட திரைப்படங்களை ஓடிடி மூலம் பார்க்க முடியும் என்பதால் இதற்கான வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் சினிமாவில் பார்க்கவில்லை என்றாலும் சில வாரங்களில் ஓடிடியில் பார்க்கும் வசதிகள் உள்ளதால் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் சென்று படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த ஓடிடி தளங்களால் குறைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டே இந்த ஓடிடி தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதிகமான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
வரப்பிரசாதமான ஓடிடி தளங்கள்: ஆனால் இடையில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்களுக்கு ஓடிடி தளங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதங்களாக அமைந்தன. தற்போதும் வாரந்தோறும் திரையரங்குகளில் ரிலீசான படங்கள் அல்லது நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தற்போது செயல்பட்டுவரும் ஓடிடி தளங்கள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானவையாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது கேரள அரசு மாற்றம் செய்துள்ளது. நாட்டிலேயே முதல் முயற்சியாக அரசு உரிமம் பெற்ற ஓடிடி தளத்தை கேரளா அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
கேரள அரசின் ஓடிடி தளம்: இன்றைய தினம் திருவனந்தபுரத்தில் இந்த சி ஸ்பேஸ் ஓடிடி தளத்தை முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்துள்ளார். திருவனந்தபுரத்தின் கைராலி திரையரங்கில் சி ஸ்பேஸ் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையாளத்தில் உருவாகும் படங்களை இந்த தளத்தில் எதிர்பார்க்கலாம். ஓடிடி தளங்கள்மூலம் குறைவான கட்டணத்தில் அதிகமான படங்களை பார்க்கும் ஐடியா செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அரசு சார்பில் புதிய ஓடிடி தளம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அரசுக்கு சொந்தமான முதல் ஓடிடி தளம்: இந்திய அளவில் முதல் முயற்சியாக அரசு உரிமம் பெற்ற இந்த ஓடிடி தளத்தை கேரள அரசு துவங்கியுள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களுக்கான ஓடிடி தளங்களை செயல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்திய அளவில் அதிகமான ஓடிடி தளங்கள் இருந்த போதிலும் ஒவ்வொரு தளங்களிலுமே அதிகமான படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன, அதனால் அரசின் இந்த ஓடிடி தளம் உருவாகுவதால் மற்ற தனியார் தளங்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகமான வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது


Click it and Unblock the Notifications











