கன்னியாஸ்திரியை லெஸ்பியனாக காட்டியுள்ள Holy Wound படத்துக்கு எதிர்ப்பு.. நாளை ஓடிடியில் ரிலீஸ்!
திருவனந்தபுரம்: மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜானகி சுதிர் மற்றும் அமிர்தா வினோத் நடிப்பில் உருவாகி உள்ள Holy Wound படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
கிறிஸ்துவ மதத்தினரின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இயக்குநர் அசோக் ஆர் நாத் படத்தை இயக்கி உள்ளார் என அவருக்கு எதிராக கண்டனங்கள் கிளம்பி உள்ளன.
இந்த படம் ஆகஸ்ட் 12ம் தேதி ஓடிடி ரிலீஸாக வெளியாகிறது.

அதிகரிக்கும் லெஸ்பியன் படங்கள்
சர்வதேச நாடுகளை போல இந்தியாவிலும் லெஸ்பியன் திரைப்படங்கள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் படங்கள் வெளியாகி வருகின்றன. பாலிவுட்டில் சோனம் கபூர், ரெஜினா கஸாண்ட்ரா நடித்த Ek Ladki Ko Dekha Toh Aisa Laga படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி நடித்த லவ் பண்ணா உட்ரணும் ஆந்தாலஜி கதையும் லெஸ்பியன் கதை போல இருக்கும். ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் படமும் லெஸ்பியன் படமாக சமீபத்தில் வந்தது.

கன்னியாஸ்த்திரியின் காதல்
கன்னியாஸ்த்ரியாக மாற உள்ள ஒரு பெண்ணுக்கும் காதல் வரும் கதையை மின்சார கனவு படத்திலேயே இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கி விட்டார். ஆனால், கன்னியாஸ்த்திரிக்கு இன்னொரு பெண் மீது லெஸ்பியன் காதல் வரும் கதையாக இந்த Holy Wound திரைப்படம் உருவாகி இருப்பதற்கு எதிராகத் தான் தற்போது கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ஆடையில்லா காட்சிகள்
நடிகைகள் இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது, படகில் நிர்வாணமாக படுத்துக் கிடப்பது என எல்லை மீறி நடித்துள்ளனர். நாளை ஆகஸ்ட் 12ம் தேதி SS Frames எனும் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது. கன்னியாஸ்திரிகள் லெஸ்பியன் கதை என்பதால் பெரிய ஓடிடி நிறுவனங்கள் கூட இந்த படத்தை வாங்கவில்லை போல தெரிகிறது.

விருதுகள்
சஹஸ்ராரா சர்வதேச திரைப்பட விழா, காஷிஷ் மும்பை சர்வதேச குயர் திரைப்பட விழா மற்றும் ஃபிரேம்லைன் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச LGBTQ திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. காதல் என்று வரும்போது அதற்கு பாலினம் முக்கியம் இல்லை என்பதை இப்படத்தின் மூலமாக சொல்ல விரும்புவதாக இயக்குநர் அசோக் ஆர் நாத் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் எதிர்ப்பு
கட்டாயத் திருமணம் செய்யப்பட்டு கணவனால் தினமும் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஒரு பெண்ணும், விருப்பமே இல்லாமல் கன்னியாஸ்திரியாக மாறிய ஒரு பெண்ணும் லெஸ்பியன் காதல் செய்யும் கதையாக உருவாகி உள்ள படத்தை ஓடிடியில் கூட வெளியிடக் கூடாது என கேரளாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











