ஓடிடியில் ‘கே.ஜி.எஃப் 2‘ படத்தை பார்க்க தனி கட்டணம்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!

சென்னை : 'கே.ஜி.எஃப் 2' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்தை பார்க்க தனி கட்டணம் செலுத்த வேண்டுமென்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் வெளியான கே.ஜி.எஃப். 2 இன்னும் பல மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் வசூல் ரூ. 1,400 கோடி வரை வரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப். 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளது. 2024-ல் கே.ஜி.எஃப். 3 திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

கேஜிஎஃப் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருப்பார் யாஷ். திடமான தேகம், ஷார்ப்பான பார்வை, மிரட்டலான நடிப்பு, அம்மாவுக்காக பறிதவிக்கும் மனம் என ஒவ்வொரு காட்சியிலும், யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து இருப்பார் யாஷ்.

ஹவுஸ்புல் காட்சிகள்

ஹவுஸ்புல் காட்சிகள்

ஏப்ரல் 14ந் தேதி வெளியான கே.ஜி.எஃப் பார்ட் 2 அனைத்து திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடி வசூலில் ரூ.1000 கோடி ரூபாயை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றியால் பாலிவுட் சற்று ஆட்டம் கண்டுவிட்டது என்று சொல்லலாம். மேலும், தமிழகத்திலும் பல முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரூ.100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ராக்கி பாய் பட்டையை கிளப்பி விட்டார்.

அமேசான் பிரைம் ஓடிடி

அமேசான் பிரைம் ஓடிடி

இந்த நிலையில், ‘கேஜிஎஃப் 2' அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆனால், கேஜிஎஃப் 2 படத்தை பார்க்க தனியாக 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது. 199 ரூபாயை செலுத்தினால், 48 மணி நேரத்திற்குள் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்து. மேலும், கட்டணமில்லாமல் ‘கேஜிஎஃப் 2'வை மே 27 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமிலேயே பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

K.G.F: Chapter 2 Review in Tamil | கே ஜி எஃப் 2 விமர்சனம் | Yessa ? Bussa ? | |Yash | Sanjay Dutt
இதெல்லாம் ரொம்ப ஒவர்

இதெல்லாம் ரொம்ப ஒவர்

அமேசான் ஓடிடி தளத்தில் இந்த அறிவிப்பால் ஷாக்கான அமேசான் சந்தாதாரர்கள் இதெல்லாம் ரொம்ப ஒவர் என்றும், ஏற்கனவே அமேசான் பிரைம் ஓடிடி தளம் சந்தாதாரர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது என்றும், தனியாக ஒரு படத்திற்கு வசூலிப்பது எல்லாம் புது நடைமுறையாக இருக்கிறது என்று கேள்வி கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X