twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேஜிஎஃப்-2ஐ 250 கோடிக்கு டீல் பேசிய பிரபல ஓடிடி நிறுவனம் நகி பேட்டா என திருப்பி அனுப்பிய படக்குழு!

    |

    பெங்களூரு : கன்னட மொழியில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

    இப்படத்தில் நடிகர் யஷ் ஹீரோவாக நடித்திருக்க இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படத்தை எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இயக்க முடியுமோ அந்த அளவுக்கு இயக்கியிருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்பொழுது இரண்டாவது பாகம் டபுள் மடங்கு பிரம்மாண்டமாக உருவாகி வருவதால் இப்படத்தின் பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்க கே ஜி எஃப் 2ஐ ஓடிடியில் வெளியிட பிரபல நிறுவனம் 250 கோடிக்கு டீல் பேச நகி பேட்டா என திருப்பி அனுப்பியுள்ளது படக்குழு.

    தமிழ் சினிமா வரலாற்றிலேயே.. அதிக விலைக்கு இந்தி டப்பிங் உரிமையை கைப்பற்றிய கமலின் விக்ரம்! தமிழ் சினிமா வரலாற்றிலேயே.. அதிக விலைக்கு இந்தி டப்பிங் உரிமையை கைப்பற்றிய கமலின் விக்ரம்!

    கேஜிஎஃப்

    கேஜிஎஃப்

    ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு நிகராக இந்தியப் படங்களின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்க அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட படங்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் பாகுபலியை தொடர்ந்து கன்னட மொழியில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் அனைவரது ஃபேவரிட் படமாக உருவாகி உள்ளது. கே ஜி எஃப் ரிலீசுக்கு பிறகு கன்னட மொழியிலிருந்து இப்படியொரு பிரமாண்டமான படமா என பலரும் வாயடைத்துப் போக இப்பொழுது அதன் இரண்டாவது பாகம் அதிரடியாக உருவாகி வருகிறது. கோலார் தங்கச் சுரங்கத்தை பற்றி பலரும் கேட்டிருப்போம் அறிந்திருப்போம் ஆனால் அதைப் பற்றிய முழுமையான கதை இங்கு பலருக்கும் தெரிந்திருக்காது. கோலார் தங்கச் சுரங்கம் எப்படி உருவானது அது எவ்வாறு செயல்படுகிறது என பலரும் அறியாத பல புதுமையான விஷயங்களை கேஜிஎஃப் படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

    ஐந்து மொழிகளில்

    ஐந்து மொழிகளில்

    யஷ் இதில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். புதுமையான கதைக்களம் மிரட்டலான வசனங்கள் என காட்சிக்கு காட்சி மாஸாக இருக்க படத்தின் வசூலும் பல சாதனைகளை செய்தது. கன்னட மொழியில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்கியிருந்தார். கே ஜி எஃப் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் இன்றும் கேஜிஎஃப்-ன் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் இருக்க கேஜிஎஃப் இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு பிரம்மாண்டமாக தயாராகி கொண்டுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் உருவாக இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இரண்டாவது பாகம் இந்தி, தமிழில்,கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    ஆதிரா

    ஆதிரா

    பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிக்கிறார். சஞ்சய் தத் கதாபாத்திரத்திற்கு ஆதிரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பார்க்கவே படு பயங்கரமாக ஆதிராவின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் போஸ்டரிலேயே அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. சஞ்சய் தத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகை ரவீனாவும் இதில் நடிக்கிறார் மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் வருகிறார். பல மடங்கு எதிர்பார்ப்புக்கு மத்தியில் கே ஜி எஃப் 2 டீசர் யஷின் பிறந்தநாளுக்கு வெளியாகி பல சாதனைகளை படைத்தது. கொரோனா பாதிப்பு மட்டும் இல்லை என்றால் இந்நேரம் கே ஜி எஃப் 2 வெளியாகி இருக்கும் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை என கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் படப்பிடிப்பு தொடர்ந்து தடைபட்டு வந்தது. இப்பொழுது ஒருவழியாக படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியது. ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் செப்டம்பர் மாதம் ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தது இப்போது அதுவும் தள்ளிபோய் உள்ளது.

    250 கோடிக்கு டீல்

    250 கோடிக்கு டீல்

    கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் இன்றுவரை மூடப்பட்டுள்ளதால் முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் வெளியாவதாக கூறப்பட்டது ஆனால் அதை படக்குழு தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று கேஜிஎஃப் படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட சுமார் 250 கோடி ரூபாய்க்கு டில் பேசியுள்ளது. ஆனால் படக்குழுவும் நடிகர் யஷும் இப்படம் முழுக்க முழுக்க ரசிகர்கள் திரையரங்களில் கண்டுகளித்த மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

    ஓடிடி வேண்டாம்

    ஓடிடி வேண்டாம்

    ஓடிடியில் வெளியிடப்பட்டால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள். அதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. 250 கோடி அல்ல நீங்கள் எத்தனை கோடியை குடுத்தாலும் கேஜிஎஃப் திரைப்படம் கட்டாயமாக திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும். அதற்காக எத்தனை காலம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. தியேட்டரில் மட்டுமே கே ஜி எஃப் 2 படத்தை ரசிகர்கள் கண்டு ரசிக்க வேண்டும். என அந்த ஓடிடி நிறுவனத்திற்கு நகி பேட்டா என சொல்லி நடிகர் யஷ் மற்றும் படக்குழு திருப்பி அனுப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ரசிகர்கள் மகிழ்ச்சி

    ரசிகர்கள் மகிழ்ச்சி

    தயாரிப்பு செலவை விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக கிடைத்தாலும் தன்னுடைய படங்களை ஓடிடிக்கு விற்க தயாராக இருக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில் பல கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தும் கே ஜி எஃப் 2 படத்தை திரையரங்குகளில் மட்டுமே ரசிகர்கள் கண்டுகளிக்க வேண்டும் என படக்குழு எடுத்துள்ள இந்த முடிவை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    KGF 2 is the much expected movie not only in Kannada but all over the India. A big OTT channel has apporached the movie team to buy the film, but the team refused to sell.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X