மனித உணர்வுகளை ஆழமாக பேசிய கிஷ்கிந்தா காண்டம்.. ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: திஞ்சித் அய்யாதன் மற்றும் ஆசிப் அலி கூட்டணியில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்பையும் வசூலையும் குவித்த படம் கிஷ்கிந்தா காண்டம். இந்த படத்தில் ஆசிப் அலியுடன் விஜயராகவன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

மர்ம த்ரில்லர் கதைகளத்தில் உருவாகியிருந்த கிஷ்கிந்தா காண்டம் சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படம் இந்த ஆண்டில் இதுவரை வெளியான மலையாள படங்களில் அதிகமான வசூலை பெற்ற ஒன்பதாவது படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்றைய தினம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த படம் இம்மாதம் 1ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

asif ali ott

கிஷ்கிந்தா காண்டம் படம்: நடிகர் ஆசிப் அலி மற்றும் திஞ்சித் அய்யாதன் கூட்டணியில் உருவாகி கடந்த செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது கிஷ்கிந்தா காண்டம். இந்த படத்தில் ஆசிப் அலியுடன் அபர்ணா பாலமுரளி, ஜெகதீஷ், நிழல்கள் ரவி, விஜயராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்திருந்தது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் ஆசிப் அலி மற்றும் திஞ்சித் அய்யாதன் கூட்டணியில் வெளியான கக்ஷி அம்மினிபிள்ளா படத்தின் மிகச் சிறப்பான வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் கிஷ்கிந்தா காண்டம் படத்தில் இணைந்திருந்தது.

10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த படம் 70 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்தது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. தந்தையும் மகனும் வாழ்ந்து வரும் வீட்டில் மகனின் இரண்டாவது மனைவியாக ஒரு பெண் உள்ளே வரும்போது நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர். மனித உணர்வுகளை ஆழமாக பேசிய இந்த படம் மிகச் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்றைய தினம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த படம் நவம்பர் 1ம் தேதியே ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்றைய தினம் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படம் ஹாலிவுட்டில் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் மொமென்ட் மற்றும் ரிமெம்பர் மீ படங்களை போன்ற அனுபவத்தை கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளானது. படத்தில் மகனாக ஆசிப் அலியும் அவரது அப்பாவாக விஜயராகவனும் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் அதிகமான காட்சிகள் குரங்குகள் அதிகமாக வாழும் கள்ளப்பாத்தி காடுகளில் எடுக்கப்பட்ட நிலையில் அவற்றை வைத்து இந்த படத்தின் கதை மாந்தர்களின் குணங்களையும் இயக்குநர் வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட், ஸ்கிரீன் பிளே மிகச் சிறப்பான வகையில் இருந்ததாக பாராட்டுக்கள் குவிந்திருந்தன. தற்போது ஓடிடியில் படம் வெளியாகி உள்ள நிலையில் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப்படம் வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகளை போலவே ஓடிடியிலும் கிஷ்கிந்தா காண்டம் மிகச் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

asif ali ott

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X