விஜயகாந்த் மகனின் கொம்புசீவி.. ஓடிடி ட்ரெண்டிங்கில் டாப்.. சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு

சென்னை: பொன்ராம் இயக்கத்தில் அதீத நம்பிக்கையுடன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த திரைப்படம் கொம்புசீவி. சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த இப்படம் கடந்த வருடம் திரையரங்குகளில் அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம். அந்த வெற்றிகள்தான் சிவகார்த்திகேயனின் கமர்ஷியல் வேல்யூவுக்கு அதிகம் உதவி செய்து முதல் விதையை போட்டன. அவர் விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியனை வைத்து கொம்புசீவி படத்தை இயக்கினார். ஏராளமானோருக்கு விஜயகாந்த் உதவினார்; அதேபோல் அவரது மகனும் சினிமாவில் வெல்வதற்கு உதவியாக தானும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படத்தை எடுத்தார் பொன்ராம்.

ரிலீஸான படம்: இதில் சண்முக பாண்டியனுடன் சரத்குமாரும் நடித்திருந்தார். கடந்த வருடத்தில் சரத்குமார் கேரக்டர் ரோல் ஏற்றிருந்த டியூட் படம் ஹிட்டானது. எனவே இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்குமா என்ற கேள்வி இருந்தது. இப்படி பல ஹைப்புகளோடு தியேட்டர்களில் படம் ரிலீஸானது. கண்டிப்பாக சண்முக பாண்டியனுக்கு இது பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் விஜயகாந்த் ரசிகர்களிடம் இருந்தது.

Kombuseevi Streams on Tentkotta Shanmuga Pandian s Film Gets Better Response on OTT
Photo Credit:

படம் சுமார்தான்: ஆனால் படம் சுமாராகவே இருந்தது. வைகை அணை கட்டப்பட்டபோது அழிந்த 12 கிராமங்களின் கதையை எடுத்திருக்கும் இயக்குநர்; தனது ஸ்டைலில் காமெடியாக டெலிவர் செய்ய முயற்சி செய்திருக்கிறார். அது முழுமையாக ஒர்க் அவுட் ஆகவில்லை. பல இடங்களில் காமெடி க்ரிஞ்சாக இருந்தது என்று ரசிகர்கள் விமர்சித்தார்கள். முக்கியமாக திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

சண்முக பாண்டியனுக்கு ஓகே: அதேசமயம் விஜயகாந்த்தின் மகன் ஸ்க்ரீனில் தோன்றும் பல சீன்களுக்கு தியேட்டரில் விசில் சத்தமும் கை தட்டலும் பறந்தன. அவருக்கென்று மவுசு இருப்பது இப்படத்தில் உறுதியானது. அவரது நடிப்பும் மோசம் எல்லாம் இல்லை. நிச்சயம் திரைத்துறையில் ஒரு ரவுண்டு வருவதற்கான அத்தனை சாராம்சங்களும் சண்முக பாண்டியனிடம் இருப்பதாகவே பலரும் சொன்னார்கள். இதனால் விஜயகாந்த்தின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஓடிடியில் ரிலீஸ்: இந்நிலையில் கொம்புசீவி படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் கிடைத்ததைவிடவும் அதிக வரவேற்பு இந்தப் படத்துக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்த்தபடியே இப்படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. எக்கச்சக்க பேர் படத்தை பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இது படக்குழுவுக்கு புதிய மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Read more about: ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X