twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்குயிட் கேம் உணர்த்தும் கொரிய சமூகப் பின்னணி!

    |

    சென்னை: ஸ்குயிட் கேம் வெப் தொடர் குறித்த விமர்சனம் மற்றும் விரிவாக்க கட்டுரையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த நமது வாசகர் ரமணி எழுதி உள்ளார்.

    Korea political and social status hidden in Squid Game

    ரமணியில் பார்வையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகளவில் ஹிட் அடித்துள்ள ஸ்குயிட் கேமில் சொல்லப்படும் தென் கொரியாவின் சமூகப் பின்னணி குறித்து இங்கே காண்போம்.

    சூதினால் தன் குடும்பச் சொத்தை அழித்த மனிதன் தான் சீயோங். அவன் கடன் சுமை காரணமாக தன் வயது போன தாயுடன் தங்கி வாழ்ந்து வருகிறான். அவன் மனைவியும் மகளும்அவனின் பரிதாபநிலை கண்டு பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள். மகளின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்கிக் கொடுக்க கூட தன் வயது முதிர்ந்த தாயிடம் கடன் வாங்கி செல்கிறான். சூதின் போதையில் அந்தப் பணத்தை குதிரை பந்தயத்தில் கட்டி தொலைக்கிறான். அவனுக்கு கடன் கொடுத்தவர்கள் வந்து அவனை இரத்தம் வரும் வரை அடித்து எச்சரிக்கை செய்து செல்கிறார்கள்.

    கடன் சுமையை பார்ப்பதா? மகளை பார்ப்பதா? தள்ளாடும் நிலையில் இருக்கும் தாயை பார்ப்பதா? என்று கலங்கும் சீயோங் இடம், ரயில் நிலையத்தில் வைத்து மர்ம மனிதன் ஒருவன் "என்னுடன் ஒரு விளையாட்டு விளையாடி நீ வெற்றி பெற்றால் உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன், தோற்றால் நீ என்னிடம் அடி வாங்க வேண்டும் சரியா?" என்று ஆசை காட்டுகிறான். சீயோங் பலமுறை தோற்று அடி வாங்கினான். பின்னர் பணத்தை ஒருமாதிரியாக வெற்றி கொள்கிறான். அதன் பிறகு அந்த மர்ம மனிதன் ஒரு அட்டையை கொடுத்து " நீ இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் இதைவிட பல மடங்கு விளையாடி உழைக்கலாம்" என விபரீத வலையில் சிக்க வைக்கிறான். சீயோங் அந்த வலையில் சிக்கி என்ன விளையாட்டுக்கள் எல்லாம் விளையாடினான் என்பதை பரபரப்புடன் சொல்லும் கொரிய நெட்பிளிக்ஸ் தொடரே, உலகெங்கும் வெற்றி நடைபோடும் "ஸ்குயிட் கேம்".

    ராஜமெளலி படத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்த அனிருத்...என்ன காரணம் தெரியுமா? ராஜமெளலி படத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்த அனிருத்...என்ன காரணம் தெரியுமா?

    தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் எடுத்த காரியத்தை பல்வேறு தடைகளை தாண்டி தொடரின் இயக்குனர் ஹுவாங் பலவருடங்கள் களித்து வெற்றிகரமாக முடித்து உள்ளார். இதில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் கதாப்பாத்திரங்களை கச்சிதமாக நடித்துள்ளார்கள். அர்ஜுன் திருப்பதி என்ற இந்திய நடிகரும் இந்தத்தொடரில் முக்கிய கதாப்பாதிரமாக நடித்து உலகப் புகழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Korea political and social status hidden in Squid Game

    இந்தத் தொடரின் உடை வடிவமைப்பும், கலை இயக்கமும், முக்கிய கதாப்பாத்திரங்களாக வரும் முகமற்றமனிதர்களும் சமூக வலைத்தளங்களில், வைரலாக பேசப்பட்டார்கள் மீம்களாக பாவிக்கப்பட்டார்கள். அந்த அளவிற்கு உலகலாவிய ரீதியாக பலரின் மனதை கொள்ளை கொண்டது.

    சிறு வயதில் விளையாடிய நம் கண்ணாமூச்சி ஆட்டம் போன்ற விளையாட்டுகளை விபரீதமான விளையாட்டாக மாற்றினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தது உண்டா? அவ்வாறான ஒரு கற்பனைக் களத்தில் தென்கொரிய பிண்ணனியில் கதை விறுவிறுப்புடன் செல்கிறது. ஆயினும் கதாபாத்திர வடிவமைப்பு மூலம் கொரியசமூகத்தின் பிரச்சினைகளை நம் கண்முன் வைக்கிறது.

    கொரிய சமூகத்தில் முதியவர்களின் ஒரு சாரார் பொருளாதார நிலை காரணமாக ஓய்வின்றி உழைக்கிறார்கள் சிலர் தனிமையில் பராமரிப்பு இன்றி ஏக்கத்துடன் தவிக்கிறார்கள் என்பதை சீயோங் சந்திக்கும் வயது முதிர்ந்த மனிதர்கள் மூலம் உணரலாம்.

    பெண்கள் தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்றால் கடுமையான பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டும். கொரிய தொழில் துறையில் இன்னும் ஆண்களின் செல்வாக்கு தான் கூடுதலாக உள்ளது என்பதனை விளையாட்டுத்திடலில் நடக்கும் நாடகத்தில் பார்க்கலாம்.

    Korea political and social status hidden in Squid Game

    தென்கொரிய சமூகம் ஒரு சார்பான சமூகம் (homogenous society). அந்த சமூகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய தற்பொழுது வெளி நாடுகளில் இருந்து செழிப்பான எதிர்காலம் தேடி பலர் குடிபெயர்ந்து செல்கிறார்கள். மேலும் அண்டை நாடான வடகொரியாவில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி பலர் சீனா வழியாக தப்பி வந்து வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு புதிதாக வந்து குடியேறிவர்களை தென்கொரியாவில் வேலைத்தளத்திலும், அன்றாட வாழ்க்கையிலும் பாகுபாடுகள் சந்திக்கிறார்கள் என்ற கசக்கும் உண்மையை கதாப்பாத்திரங்களின் வார்த்தை பிரயோகங்களிலும், நடிப்பிலும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    என்ன தான் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி கண்டு இருந்தாலும், இன்னும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்கொரியாவில் உண்டு. ஒரு சில குடும்ப ரீதியான வர்த்தக குழுமங்களே பாரிய அளவில் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகின்றன. நடுத்தர மக்கள் பெரும் கடன் சுமையில் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது கதையில் வெளிப்படுகிறது.

    போட்டியே முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை சித்தாந்தம். இதையே தமிழில் "கீரைக்கடைக்கும் எதிர்கடை வேண்டும்" என்று சொல்வார்கள். ஆயினும் அதீத போட்டி மனப்பான்மையால் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை விட ஏற்றத் தாழ்வு, கல்வியில் பாகுபாடு, கலவரங்கள், மன உளைச்சல் மிக்க சமூகம் போன்ற எதிர்மறையானவிளைவுகளேஅதிகரிக்கும் என்பதை ஸ்குயிட்கேம் சிறுபிள்ளை விளையாட்டுகள் மூலம் அழகாக வலியுறுத்தியுள்ளது.

    Recommended Video

    Squid Game (2021) Web Series Review in Tamil by Poster Pakiri | Filmibeat Tamil

    உலகலாவிய ரீதியாக இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஸ்குயிட்கேமின் இரண்டாம் பாகம் வரப்போகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள். முதலாம் பாகம் போல இரண்டாம் பாகத்திலும் விறுவிறுப்பையும் திகிலையும் தக்க வைக்குமா ஸ்குயிட்கேம்? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Our reader Ramani from Australia describe about Korea political and social status details hidden in Netfix’s Squid Game webseries in this article.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X