twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சிக்கும் சாமானியர்கள்.. கெத்து காட்டும் 'கொத்து' - திரைப்பட விமர்சனம் !!

    |

    விமர்சனம்

    நடிகர்கள்: அசீஃப் அலி, ரோஷன் மேத்யூஸ், நிகிலா விமல், சீலக்ஷ்மி மற்றும் விஜிலேஷ்,ரஞ்சித்

    இயக்கம்: சிபி மலையல்

    கதை திரைக்கதை: ஹேமந்த குமார்

    கேமரா: ப்ரசாந்த் ரவீந்திரன்

    அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சிக்கும் சாமானியர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே கொத்து படத்தின் கதை.

    கட்சிக்காக கொலை செய்யும் இரண்டு இளைஞர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் கொலை தீர்வல்ல என்பதை உணர்த்தும் கட்டமும் அருமை.

    என்னதான் கொள்கை பிடிப்பென்றாலும் சூழ்ச்சி வலையில் சிக்கும்போது சாமானிய கட்சி பிடிப்புள்ள தொண்டன் கதி என்னவாகிறது என்பதை காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

    பண்ணையாரை பழிவாங்கிய குடும்ப பகை… சூழ்ச்சியில் வீழ்ந்த பாண்டி: பேட்டைக்காளி 3 எபிசோட்கள் விமர்சனம்பண்ணையாரை பழிவாங்கிய குடும்ப பகை… சூழ்ச்சியில் வீழ்ந்த பாண்டி: பேட்டைக்காளி 3 எபிசோட்கள் விமர்சனம்

     கதை இதுதான்

    கதை இதுதான்

    கண்ணூரைச் சேர்ந்த ஷானு மற்றும் சுமேஷ் அங்குள்ள இடதுசாரி கட்சியில் இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகியாக உள்ள தங்கள் அரசியல் கட்சியின் காட்பாதர் தோழர் சதானந்தனின் அறிவுறுத்தல்களைக் இருவரும் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்கும் உறுதியானவர்கள். கட்சித் தொண்டர் எம்.ஏ.நாகேந்திரன் கொலைக்குப் பிறகு, கட்சி தனது கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக பழிவாங்கும் கொலையை செய்ய முடிவு செய்தது. கட்சிப்பணியை நிறைவேற்ற ஷானு, சுமேஷ் மற்றும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் இருவருக்கும் உத்தரவிடுகிறார் தோழர் சதானந்தன். கொலை செய்ய செல்லும் ஷானு, சுமேஷ் உள்ளிட்ட தோழர்களில் ஷானு எதிர்க்கட்சி ஆளை கொலை செய்கிறார்.

     மோதலில் ஒரு காதல் திருமணம்

    மோதலில் ஒரு காதல் திருமணம்

    பின்னர் அவரும் அவது பால்ய கால தோழன் சுமேஷ் அவரது குடும்பம் சந்திக்கும் சிக்கல்களையும் அவர்களது வாழ்க்கையே திசை மாறி செல்வதையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இடையில் ஷானு ஒரு கல்யாண வீட்டில் மாப்பிள்ளையின் முரட்டுகுணத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவ போக திருமணம் நிற்க மணப்பெண்ணும், ஷானுவும் காதலிக்க கட்சியின் தலைமை தோழர் சதானந்தன் தலையிட்டு ஷானுவுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.

     கொல்பவர், கொல்லப்படுபவர் குடும்பம் அடையும் துன்பம்

    கொல்பவர், கொல்லப்படுபவர் குடும்பம் அடையும் துன்பம்

    கொலைச் சம்பவத்துக்காக ஒரு ஆளை சரணடைய செய்யவேண்டும் என போலீஸ் சொல்ல, புதுமாப்பிள்ளை ஷானுவுக்கு பதில் அவரது நண்பர் கட்சித்தோழர் சுமேஷை சரணடைய வைத்து சிறைக்கு அனுப்புகிறார். இதனால் எதிர்கட்சியினர் சுமேஷ் வீட்டை குண்டு வைத்து தகர்கின்றனர். அவரது தாயார் பாதிக்கப்படுகிறார். இடையில் தான் செய்த கொலையை எண்ணி வருந்துகிறார் ஷானு. தன்னால் கொல்லப்பட்ட நபரின் குடும்பம் வறுமையில் வாடுவதை பார்த்து கலங்கி நிற்கிறார். அவரை கொல்லவும் எதிர்க்கட்சியினர் அலைகிறார்கள்.

     அடிமை மனோபாவ தொண்டர்களின் சீரழிவை சொல்லும் கதை

    அடிமை மனோபாவ தொண்டர்களின் சீரழிவை சொல்லும் கதை

    ஜாமீனில் வெளிவரும் உமேஷை தாயாரைக்கூட பார்க்கவிடாமல் ரயிலேற்றி தலைமறைவாக இருக்க கட்சி மேலிடம் கட்டளையிடுகிறது. இது என்னடா வாழ்க்கை என அனைவரும் சலித்துக்கொள்கின்றனர். பின்னர் நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை. சிபி மலையில் இயக்கியிருக்கும் இந்தப் படம், அரசியல் கட்சிகள் என்ற பெயரில் 'கண்ணுக்குக் கண்' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி கண்ணூரில் வாழும் ஒரு கூட்டத்தின் கதையைச் சொல்கிறது. கட்சி முடிவை அடிமை மனோபாவத்துடன் ஏற்ற ஷானு , உமேஷ் பின் தவறை உணரும்போது நிலைமை கை மீறி போகிறது. இப்படம் ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

     படத்தின் பிளஸ்

    படத்தின் பிளஸ்

    ஷானுவின் மனைவி ஹிஸ்ஸானா, அவள் ஒரு கேட்டரிங் தொழிலாளியை திருமணம் செய்து கொள்ளவில்லை, ஒரு அரசியல் குண்டரை , கொலையாளியை திருமணம் செய்தததை உணர்ந்தவுடன் வெகுண்டெழுகிறார். 'அந்த மனிதனை எந்த அரசியல் இயக்கத்திற்காக கொன்றாய்?' இப்படியே தொடர் கொலைகள் செய்வீர்களா? என கேட்கும் இடமும், மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கக்கூட கையில் காசில்லாமல் மகளுடன் நிற்கும் பெண்ணை பார்த்து நாயகன் ஷானு பரிதாப்படும்போது அவங்க வேறு யாருமில்லை நீ கொன்றாயே அவனது மனைவி மகள் என்று சொல்லும்போது அரசியல் கட்சிகளின் கௌரவ பிரச்சினையில் சாதாரண தொண்டனின் குடும்பம் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை அழகாக பதிவு செய்திருப்பார் இயக்குநர்.

     கதாநாயகன் ஆசிஃப் அலியின் கலக்கல் நடிப்பு

    கதாநாயகன் ஆசிஃப் அலியின் கலக்கல் நடிப்பு

    ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குகிறேன் என்ற வேகத்தில் இளைஞர்களின் மனதில் கொள்கை என்கிற பெயரில் ஆணவத்தையும், ஆக்ரோஷத்தையும் விதைத்து கட்சியின் மீதான பற்றைத்தாண்டி வாழ்க்கையின் யதார்த்தம் அழுத்தும்போது வெளிப்படும் தொண்டனின் இயலாமையை கதாநாயகன் ஷானுவாக நடித்துள்ள அசீஃப் அலி அழகாக வெளிப்படுத்துகிறார். கட்சி, கொள்கை சித்தாந்தம் தாண்டி அதை வெறித்தனமாக கடைபிடிக்கும் அடிமட்ட தொண்டன் வாழ்க்கை எப்படி பாதிக்கும் என்பதை திரைக்கதை எழுத்தாளர் ஹேமந்த் குமார் யாருக்கும் பாதிப்பில்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.

     கலக்கும் ரோஷன் மேத்யூஸ்

    கலக்கும் ரோஷன் மேத்யூஸ்

    ரோஷன் மேத்யூஸ், நிகிலா விமல், சீலக்ஷ்மி மற்றும் விஜிலேஷ் ஆகியோரின் நடிப்பால் படம் மேலும் சீராக செல்கிறது. சுமேஷ் வேடத்தில் ரோஷன் கலக்குகிறார். அவரது அப்பாவி புன்னகையாலும் அம்மாவை பார்க்காமல் துடிப்பதும், கொலைப்பழியை ஏற்கச்சொல்லி மேலிடம் சொல்லும்போது ஏற்றுக்கொண்டு செல்லும்போது தாயை ஏக்கத்துடன் பார்த்துச் செல்லும் காட்சியிலும் கலங்க வைக்கிறார். தோழர் சதானந்தனாக நடிக்கும் ரஞ்சித், கட்சி மேலிடம் சொல்வதை செய்வதும், கீழே உள்ள தோழர்களின் நலனை கவனிக்கும் தலைவராக சிறப்பாக செய்துள்ளார்.இப்படம் ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

     மைனஸ்

    மைனஸ்

    கொலைகள் நடப்பதும், கட்சிக்காக நடத்தப்படும் கொலைகளும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆனால் படத்தில் அழுத்தமான காட்சிகள் இல்லை. இஸ்லாமிய பெண் திருமணமான பெண் விவாகரத்து வாங்காமல் கதாநாயகனுக்கு கட்சி திருமணம் செய்து வைப்பது போன்ற காட்சிகள் எல்லாம் அபத்தம். கட்சித்தொண்டர் பாதிக்கப்படுவதாக பொதுவாக் காட்சி வைக்காமல் அதில் இடதுசாரிகளுக்கு எதிராக சற்று கூடுதல் வன்மத்தை கதாசிரியரும், இயக்குநரும் காண்பித்துள்ளனரோ என்கிற சந்தேகமும் எழுகிறது.

     படத்தின் சிறப்பு

    படத்தின் சிறப்பு

    கட்சியில் இருப்பது, கொள்கைகளை ஏற்றுக்கொள்வது சரி. ஆனால் அடிமைத்தனமாக நடந்தால் வாழ்க்கையை சீரழித்து அதற்கும் நீதான் காரணம் உன்னால் தான் கட்சிக்கு கெட்டப்பெயர் என பழியை திருப்பிவிட்டு உடன் பழகிய நண்பர்களையே பகைவராக்கும் கட்சி தலைமை புத்தியை அழகாக சொல்லியதற்கு படத்தை பாராட்டித்தான் தீரவேண்டும். கடைசி காட்சியில் ஷானு வன்முறையை கையிலெடுத்து பின்னர் அதை சிறுமியின் வேண்டுகோளால் கைவிடும் காட்சி அருமை.

      English summary
      Kotthu Malayalam Movie Review in Tamil [ கொத்து மலையாள திரைப்பட விமர்சனம்]: The story of Kothu is about how common people get caught in the political chess game and how their lives change. The incidents in the lives of two young men who kill for the party are also wonderful and the scene shows that killing is not the solution. They have visualized what happens to the life of the common party men when it gets caught in the net of intrigue no matter what the policy.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X