Hit list movie: ஓடிடியில் வெளியாகும் ஹிட் லிஸ்ட் படம்.. இரண்டு தளங்களில் வெளியாகுதுங்க!
சென்னை: இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக என்ட்ரி கொடுத்த படம் ஹிட் லிஸ்ட். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் கடந்த மே மாதம் 31ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசானது. கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பிரமோஷன்களை கொடுத்திருந்தனர்.
படம் ரிலீசாகி ரசிகர்களிடையே பாசிட்டிவான ரெஸ்பான்சை பெற்றிருந்த நிலையில் பிரபலங்களும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருந்தனர். படத்தில் விஜய் கனிஷ்காவுடன் சரத்குமார் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் நாளைய தினம் இரு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.

ஹிட் லிஸ்ட் படம்: இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக என்ட்ரி கொடுத்த படம் ஹிட் லிஸ்ட். சூர்ய கதிர் இயக்கத்தில் கடந்த மே மாதம் 31ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசானது. படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரித்திருந்தார். படத்தில் சரத்குமார் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் சித்தாரா, கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. விஜய் கனிஷ்கா இந்த படத்தில் ஹீரோவாக என்ட்ரி ஆன நிலையில் அவரது நடிப்பும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
சைக்கோ திரில்லர் படம்: ஒரு சைக்கோ கொலைகாரன் வித்தியாசமான முறையில் நாயகனின் குடும்பத்தினரை கொலை செய்கிறான். அதிலிருந்து தன்னுடைய குடும்பத்தை நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதைக்களமாக அமைந்திருந்தது. திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த இந்தப் படம் நாளைய தினம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் உரிமையை பிரபல ஓடிடி தனமான அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தமிழ் வாங்கியுள்ளன. இந்த தளங்களில் ஹிட் லிஸ்ட் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் உள்ளிட்ட படங்கள் போலவே இந்த படமும் சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகியிருந்தது.
நாளை ஓடிடியில் வெளியீடு: இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று கூறலாம். இதனிடையே திரையரங்கில் இந்த படத்தை பார்க்க மிஸ் செய்த ரசிகர்கள் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தனர். இதையடுத்து படம் நாளைய தினம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்தப் படம் ஓடிடியில் ஏராளமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி ரிலீஸ் பிரமோ: அன்பான குடும்பத்தினை கொண்ட ஹீரோவிற்கு முகமுடி அணிந்த சைக்கோ ஒருவர், அவரது குடும்பத்தினரை கடத்தி எப்படி அவரை தான் நினைத்ததை எல்லாம் செய்ய வைக்கிறார் என்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் காணப்பட்டது. இந்தப் படத்தின் மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்கு போலீசாரின் ஒத்துழைப்பும் படத்தில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. சில கலவையான விமர்சனங்களையும் பெற்ற நிலையில், ஓடிடியில் இந்தப் படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். இதனிடையே படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கான பிரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











