OTT Release: குடும்பஸ்தன் முதல் ராஜாகிளி வரை.. நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: இந்த படம் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், அகத்தியா, சப்தம் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், இதில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் தான் வசூல் வேட்டை நடத்தியது. தனுஷ் தயாரித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் கூட மண்ணை கவ்வி விட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் வெளியாகாததால் அனைவரின் பார்வையும் ஓடிடி பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் நாளை தண்டேல், குடும்பஸ்தன், குழந்தை முன்னேற்றக் கழகம் என, தமிழ், தெலுங்கு, இந்தி என வரிசையாக பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

தண்டேல்: நாக சைதன்யா, சாய்பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படத்தை நாளை முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

Kudumbasthan Thandel OTT

மீன்பிடி பயணத்தின் போது தற்செயலாக பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நாக சைத்தன்யா சென்று விட, அவரை நினைத்து உருகுகிறாள், அவரது காதலி சாய் பல்லவி. பாகிஸ்தானில் இருந்து காதலனை எப்படி மீட்டார்... இவர்களின் காதல் கைகூடியதா என்பதை படத்தின் இயக்குநர் அழகாக கூறியுள்ளார். மீனவரின் காதல், வீரம் மற்றும் தேசபக்தியே 'தண்டேல்' படத்தின் கதைக்களம்.

குடும்பஸ்தன்: ஜனவரி 24-ஆம் தேதி தியேட்டரில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஜெய் பீம், லவ்வர், குட் நைட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹீரோவின் வாழ்க்கையை, காமெடியாக குடும்பஸ்தன் படத்தை படக்குழுவினர் உருவாக்கியிருந்தனர். இந்த படத்தில் மணிகண்டன் உடன் மேக்னா குரு, சோமசுந்தரம், சுந்தரராஜன் முக்கிய கேரக்டரில் நடித்தனர். வைசாக் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் மணிகண்டனுக்கு, குறைந்த சம்பளம் வாங்குவதால் குடும்பத்தில் மரியாதையே இல்லை. இந்த நேரத்தில் வேலையும் போய்விட, அதை வீட்டில் மறைந்து கடன் வாங்கி குடும்பத்தை ஏமாற்றி வருகிறார்.ஒரு கட்டத்தில் இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வர, பின் என்ன ஆனாது என்பது தான் குடும்பஸ்தன் திரைப்படத்தின் கதை. இப்படம் ஜி5 தளத்தில் நாளை பார்க்கலாம்.

Kudumbasthan Thandel OTT

ராஜகிளி: உமாபதி ராமையா இயக்கிய ஒரு அதிரடி திரைப்படம் தான் ராஜகிளி, இதில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி மற்றும் தீபா என பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 27ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து இப்படம் Tentkotta ஓடிடி தளத்தில் நாளை ஸ்ட்ரீமிங்காக உள்ளது.

Kudumbasthan Thandel OTT

குழந்தை முன்னேற்றக் கழகம்: அரசியல் நையாண்டி திரைப்படமான குழந்தை முன்னேற்றக் கழகம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஷங்கர் தயாள் இயக்கிய இந்தப் படத்தில் யோகி பாபு,செந்தில்,இமயவர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், சுப்பு பஞ்சு, சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜனவரி 24ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஜெ.லக்‌ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைத்துள்ளார்.

Kudumbasthan Thandel OTT

Rekhachithram: மலையாள பிளாக்பஸ்டர் படமான ரேகாசித்திரம் படத்தில் ஆசிஃப் அலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9ந் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று , உலகளவில் ₹55 கோடிக்கு மேல் வசூலித்தது இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் அல்லது பிரைம் வீடியோவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், SonyLIV இல் இப்படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம். இடுக்கியில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையில் தொடங்கி அந்த கொலைக்கும் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி போலீஸ் அதிகாரியான ஆசிஃப் அலி கண்டுபிடிப்பது தான் ரேகாசித்திரம் படத்தின் கதை,

Kudumbasthan Thandel OTT

Laila (Telugu): ராம் நாராயண் இயக்கிய திரைப்படம் லைலா. தெலுங்கு திரைப்படமான இப்படத்தில் விஸ்வக் சென், பெண் வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ந் தேதி வெளியானது. ஆனால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டாமல் தோல்வித் திரைப்படமானது. இதையடுத்து, இப்படம் மார்ச் 7ந் தேதியான நாளை முதல் ஆஹாவில் பார்க்கலாம்.

Kudumbasthan Thandel OTT

Dupahiya(Hindi): துபாஹியா ஒரு நகைச்சுவை திரைப்படமாகும் இப்படத்தில், கஜராஜ் ராவ், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, ரேணுகா ஷஹானே மற்றும் புவன் அரோரா ஆகியோர் நடித்துள்ளனர், இத்திரைப்படத்தை அமோசன் பிரைமில் நாளை வெளியாக உள்ளது.

Nadaaniyan(Hindi): குஷி கபூர் மற்றும் இப்ராஹிம் அலி கான் ஆகியோர் நடித்த திரைப்படம் நாடானியன். நொய்டாவைச் சேர்ந்த மாணவரான இப்ராஹிம் அலி கான் மற்றும் குஷி கபூர் சுற்றியே நடக்கும் ஒரு சிக்கலான காதல் கதையாகும்.இப்படத்தில், தியா மிர்சா, ஜுகல் ஹன்ஸ்ராஜ், சுனில் ஷெட்டி மற்றும் மஹிமா சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை ஸ்டீமாக உள்ளது.

சாதனை படைத்த படம்: ஜீ5 தளத்தில் வெளியான குடும்பஸ்தன் படத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை அள்ளி கொடுத்தனர்.. அதன்படி, படம் வெளியான 4 நாட்களிலேயே 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதற்கு முக்கிய காரணம் படத்திற்கு பெண்களை விட ஆண்கள் கொடுத்த ஆதரவு தான். வாழ்க்கையில் நடப்பது எல்லாம் திரையில வருது. தங்களுடைய சொந்த வாழ்க்கையை பார்க்கிற மாதிரியே இருப்பதாக படத்தை பார்த்த இளைஞர்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.தமிழ் ஓடிடி தளங்களில் சிறந்த பிளாக்பஸ்டர் வெற்றி படமாக இது கருதப்படுகிறது. குடும்பப் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X