Kushi: சமந்தாவின் குஷி ஓடிடி ரிலீஸ் தேதி... அதுக்குள்ள என்ன அவசரம்... இதுவும் ப்ளாப்பா..?
சென்னை: விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் இம்மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரொமாண்டிக் மூவியாக உருவாகியுள்ள குஷி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் கிட்டத்தட்ட 100 கோடி வசூலை எட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குஷி ஓடிடி ரிலீஸ் தேதி: தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த குஷி திரைப்படத்தை, சிவ நிர்வாணா இயக்கினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படம், கடந்த 1ம் தேதி வெளியானது. தெலுங்கு மட்டுமில்லாமல், தமிழிலும் இந்தப் படம் வெளியானது. விஜய் தேவரகொண்டா, சமந்தா காம்போவில் உருவான முதல் படம் என்பதால், குஷிக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
கடந்த வாரம் வெளியான குஷி படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் 100 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரம், முதல் மூன்று நாட்களில் நல்ல ஓபனிங் இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் குஷி படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை எனத் தெரிகிறது.
விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவருக்குமே கடைசியாக வெளியான படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதனால், குஷி திரைப்படம் அவர்களது கேரியரில் ரொம்பவே முக்கியமாக பார்க்கப்பட்டது. ஆனால், இதுவும் அவர்களை கைவிட்டு விட்டதாக டோலிவுட் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குஷி திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஷி வெளியான 10 நாட்களில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அந்தப் படத்திற்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் ரசிகர்களின் கூட்டம் குறைந்துவிடும் எனத் தெரிகிறது.
விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்ள, அதன்பின்னர் அவர்களுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் தான் குஷி. விஜய் - ஜோதிகா நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான குஷி படத்தின் டைட்டில் போல, கதையிலும் அதே ஈகோவை பின்னணியாக வைத்து, கொஞ்சம் கலர்ஃபுல்லாக ட்ரீட் கொடுத்துள்ளார் சிவ நிர்வாணா. படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நெருக்கமாக நடித்திருந்தது, ரசிகர்களை கிறங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











