ஒரே ஒரு படம் ஓஹோன்னு வாழ்க்கை.. ராஷ்மிகாவை பின்னுக்குத்தள்ளி நேஷனல் கிரஷ்ஷான 23 வயது நடிகை!
மும்பை: கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவை அந்த படத்துக்கு பிறகு ரசிகர்கள் நேஷனல் கிரஷ் எனக் கொண்டாடினர். கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வருகிறார்.
கடந்த ஆண்டு அனிமல் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவை அந்த படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயினான திரிப்தி திம்ரி பின்னுக்கு தள்ளி நேஷனல் கிரஷ் என கொண்டாடப்பட்டார். இந்நிலையில், இன்னொரு நடிகையை தற்போது ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வருகின்றனர்.

23 வயதாகும் அந்த இளம் நடிகை சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நிலையில் ஒரே ஒரு படத்தில் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் யார் என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
லாபதா லேடீஸ்: பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான லாபதா லேடீஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரதிபா ரண்டாவுக்கு திடீரென ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். 23 வயதாகும் பிரதீபா ரண்டா இதற்கு முன் சீரியல்களில் நடித்து வந்த நிலையில், லாபதா லேடீஸ் படத்தில் தான் ஹீரோயின் ஆக அறிமுகமானார். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அனிமல் படத்தை விட நெட்பிளிக்ஸில் அதிக நேரம் பார்க்கப்பட்ட படமாக மாறியது.

நேஷனல் கிரஷ்: நடிகை ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் கிரஷ் என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், தற்போது பிரதிபா ரண்டாவை நேஷனல் கிரஷ்ஷாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிரடியாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்கள் இணைந்துள்ளதாக கூறுகின்றனர்.
கவர்ச்சி காட்டாமல்: பொதுவாக நேஷனல் கிரஷ் ஆக வேண்டும் என்றால் நடிகைகள் பிட்டுத் துணிகளை அணிந்துக் கொண்டு ஆட்டம் போட்டால் தான் ஆவார்கள் என்றெல்லாம் இல்லை. திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாலே ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு உதாரணமாக பிரதிபா ராண்டா மாறியுள்ளார். அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் அவர் எப்படி நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹீராமண்டி: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ஹீராமண்டி வெப்சீரிஸில் ஷாமா கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். பாலிவுட்டில் தற்போது பல பிரபல நடிகர்கள் இந்த நடிகையை புக் செய்ய போட்டிப் போட்டு வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











