Label Review - Episode 7: மேட்டர் தான் மேட்டரு.. அய்யாவை ஆட்டம் காண வைத்த ஜெய்.. லேபில் விமர்சனம்!

சென்னை: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப், மாஸ்டர் மகேந்திரன், ஸ்ரீமன், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, சரண்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லேபில் வெப்சீரிஸ் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டே இருக்கிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான பல வெப்சீரிஸ்கள் சொதப்பி வந்த நிலையில், லேபில் வெப்சீரிஸ் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடுகளாக வெளியாகி ரசிக்க வைத்து வருகிறது.

Label web series Episode 7 Review in Tamil

ஆனால், இந்த 7வது எபிசோடில் அதிகப்படியான ஆபாச வசனங்கள் மற்றும் ஒரே இடத்தில் திரைக்கதை சுற்றுவது போன்ற ஃபீலிங் ஹெவியாக ஏற்படுகிறது. எதெல்லாம் பிளஸ், எதெல்லாம் மைனஸ் என்பதை விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

ஜெய்க்கு ஸ்கெட்ச்: கடந்த எபிசோடில் சிறுவர்கள் சிலர் ஜெய்க்கு ஸ்கெட்ச் போடுவதும் அதிலிருந்து அவர் தப்பிப்பதும் பார்க்க நன்றாக இருந்தது. ஆனால், இந்த எபிசோடிலும் ஜெய்க்கு மீண்டும் ஸ்கெட்ச் போடப்படுகிறது. ஹீரோயின் பைக்கில் இருந்து ஜம்ப் பண்ணி எஸ்கேப் ஆகி ஓடும் ஹீரோ ஜெய்யை ஏற்கனவே ஒரு சிலரை குத்திக் கொன்று கொண்டிருக்கும் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவரது நண்பருமான ஹரிசங்கர் நாராயணன் காப்பாற்றி ஜெய்க்காக கொலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆபாச வசனங்கள்: ஓடிடி என்பதால் அருண்ராஜா காமராஜ் ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை படு மோசமான ஆபாச வசனங்களை சும்மா அள்ளித் தெளித்து போதும் போதும் என்கிற ஃபீலிங்கையே கொடுக்கிறார். இந்தி டப் சீரியல்களில் இடம்பெறும் கெட்ட வார்த்தைகளை விட லேபில் வெப்சீரிஸில் அதுவும் இந்த 7வது எபிசோடில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு தான் பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு எடுத்து வைத்துள்ளனர்.

மேட்டர் தான் மேட்டரே: அதுமட்டுமின்றி மகேந்திரனின் காதலி அவரை தேடி அம்மாவிடம் செல்வதும், அவன் கூட சேராத உன் வாழ்க்கை நாசமாகிடும் என அம்மா எச்சரிப்பதும், அதன் பின்னர் மகேந்திரனை சந்திக்க, என்ன மேட்டர் என அவர் கேட்க, மேட்டர் தான் மேட்டரே என தனது வயிற்றில் குழந்தை வளர்வதை சொல்லும் காட்சிகள் எல்லாம் இந்த கதைக்கு எந்தவொரு இம்பாக்ட்டையும் கொடுக்காமல் ரொம்பவே ஃபிளாட்டாக உள்ளது.

அய்யாவுக்கு செக்: கடைசியில் ஒரு ட்விஸ்ட் உடன் முடிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் கடந்த எபிசோடில் முடித்ததை போலவே அய்யாவுக்கு எதிராக ஒட்டுமொத்த லேபில் குடும்பத்தில் நடந்த கொலைகளுக்கும் அவர் தான் காரணம் என ஜெய் வழக்குப் போட்டுள்ளதாக சுரேஷ் சக்கரவர்த்தி பில்டப் கொடுக்க, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் ஹரி சங்கரே ஜெய்யை அடுத்த எபிசோடில் ஸ்கெட்ச் போட்டு கொல்லப் போகின்றனரா? என்கிற இல்லை ஒட்டுமொத்த லேபிலையும் இவர்களை வைத்தே ஜெய் முடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வியுடன் இந்த எபிசோடு நிறைவடைகிறது. பல காட்சிகள் ரிப்பீட் ஆவது போலவும், இன்னமும் அய்யாவை காட்டாமல் சஸ்பென்ஸ் செய்து வைத்திருப்பது கடுப்பையே கிளப்புகிறது. அடுத்த எபிசோடு எப்படி இருக்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X