Label Review - Episode 6: இதுதான் என்னோட லேபில்.. அய்யாவுக்கு ஆப்பு வைப்பாரா ஜெய்? லேபில் விமர்சனம்!
சென்னை: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, மாஸ்டர் மகேந்திரன், சரண்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லேபில் படத்தின் 6வது எபிசோடு கடந்த வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் புதிய எபிசோடுகள் வெளியாகின்றன. ஒட்டுமொத்தமாக 8 எபிசோடுகள் உள்ள நிலையில், 6வது எபிசோடு எப்படி இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..

லேபில் 5 எபிசோடு வரை: வடசென்னையில் வாலி நகர் ஏரியாவில் ரவுடிசம் நடக்கிறது. இளைஞர்கள் அந்த லேபிலில் சேரத் துடிக்கின்றனர். அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்தி மாற்றுவதற்காக ஒரு வழக்கறிஞராக போராடி வருகிறார் ஜெய். நீதிபதியக வேண்டும் என அவர் போராடி வரும் நிலையில், அவரையும் கைதியாக மாற்றி உள்ளே தள்ள திட்டம் போட்டு கொண்டு செல்வதுடன் 5வது எபிசோடை முடித்து விட்டனர்.
6வது எபிசோடு அதிரடி: ஜெய்க்கு என்ன ஆகுமோ என ரசிகர்கள் பதறிய நிலையில், முதல் காட்சியிலேயே எஸ்.ஐ. அருண்குமார் இதற்கு முன் போலியாக வழக்குகளை ஜோடித்த விவகாரங்களில் அவரை உள்ளே கோர்த்துவிட்டு அதிரடியாக தப்பித்து விட்டார். இவரை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்ட அய்யா எனும் மேலிடம் நகர்த்தி வரும் காய்கள் குறித்து போலீஸ் அருண் குமார் மூலம் அறிந்து கொள்ளும் ஜெய் அய்யாவை வெளியே கொண்டு வர முயற்சிக்கப் போவதாக கூறுவதுடன் 6வது எபிசோடு முடிகிறது.
நல்ல மேக்கிங்: எடுத்துக் கொண்ட கதையை சுவாரஸ்யம் குறையாமல் இயக்குநர் அருண்ராஜா குமாரராஜா இயக்கி உள்ளார். மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர் வெளியே வந்ததும் பைக் எல்லாம் வாங்கிக் கொடுத்தாலும், அவர்களின் வீட்டில் மதிக்காமல் அசிங்கப்படுவது என தப்பு செய்பவர்களை இந்த சமூகம் மட்டுமல்ல பெற்றோர்கள் கூட மதிக்கமாட்டார்கள் என்பதை காட்சிகளாக விவரித்துள்ளார் இயக்குநர். நடிகர் ஜெய் போலீஸிடம் பேசும் காட்சியாக இருக்கட்டும், வக்கீல் சுரேஷ் சக்கரவர்த்திக்கு செக் வைக்கும் சீனாக இருக்கட்டும் எல்லாமே சிறப்பாகவே உள்ளது. இந்த சீரிஸ் எப்படி முடியப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











