Leader OTT: லெஜண்ட் சரவணனின் ‘லீடர்‘ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் தியேட்டரில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் 'லீடர்'. இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், லால், அறம்தாங்கி நிஷா என பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனத்தை பெற்ற லீடர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தொழிலதிபரான அருள் சரவணன் 'லெஜண்ட்' படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். அவர் நடித்த முதல் திரைப்படமே நல்ல விமர்சனத்தையும், வசூலையும் குவித்தது. இதையடுத்து, லெஜண்ட் சரவணன் நடித்த 'லீடர்' படம் ஏப்ரல் மாதம் 3ந் தேதி தியேட்டரில் வெளியானது. தூத்துக்குடியில் துறைமுகத்தில் சமூக விரோதமான செயல்கள் நடப்பதை கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா, அதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாமல் தவிக்கிறாள். இந்த நேரத்தில் தான் ஆண்ட்ரியாவின் அப்பா, அந்த துறைமுகத்தில் வில்லனுடன் நெருங்கி பழகக் கூடிய ஒருவனால் தான், அந்த துறைமுகத்தில் அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும் என ஐடியா கொடுக்கிறார்.

லெஜண்ட் சரவணணின் லீடர்: இதையடுத்து துறைமுகத்தை ஆண்ட்ரியா மோப்பமிட்டு மெக்கானிக்கான லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி ஹார்பரில் இருக்கும் கார்களை சரி செய்து கொடுப்பதால், வில்லனுடன் நல்ல நட்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறாள். இதனால், ஆண்ட்ரியா லெஜண்ட் சரவணனை சந்தித்து ஹார்பர்ல இருக்கும் கண்டெய்னரில் ஓட்டு கெட்கும் மிஷினை வைக்க வேண்டும் என சொல்கிறாள். ஆனால் சரவணன், என்னால் என் முதலாளிக்கு துரோகம் செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிறார். ஆண்ட்ரியா சரவணனை சந்தித்து பேசிய விஷயம் ஹார்பரில் இருக்கும் வில்லனுக்கு தெரியவர, எதுக்காக இன்ஸ்பெக்டர் உன்னை சந்தித்தார், என்ன பேசினார் என வில்லன் மிரட்டி லெஜண்ட் சரவணனுக்கு தொல்லை கொடுக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை,
ஓடிடி: மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்ற லீடர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படம் அமேசான் பிரைவில் மே 29ந் தேதி மிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாக உள்ளது. தியேட்டரில் படத்தை பார்க்க தவறியவர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications