Leo OTT Release : என்னடா பித்தலாட்டம் இது? லியோன்னு ஓணான காட்டுறீங்க!

சென்னை: நெட்பிளிக்ஸில் வெளியாகும் 90 சதவீத படங்களை குழந்தைகளுடன் மற்றும் குடும்பத்துடன் பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ள நிலையில், லியோ என்கிற டைட்டிலில் வெளியாகி உள்ள அனிமேஷன் படத்தை ஜாலியாக குழந்தைகள் தமிழில் கண்டு ரசிக்கலாம்.

இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் லியோ படம் வெளியாகிறது என்றதுமே விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் தான் வருகிறதா? என எதிர்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அனிமேஷன் ஓணான் படத்தை வெளியிட்டு பல்பு கொடுத்துள்ளது நெட்பிளிக்ஸ்.

Leo animation movie released on Netflix OTT before Vijays Leo

ஓடிடியில் ஓணான் லியோ: நெட்பிளிக்ஸ் ஓடிடி பக்கம் தான் ரசிகர்கள் இந்த நவம்பர் மாதம் குடிகொண்டு இருக்கப் போகின்றனர். ஏற்கனவே வெளியான ஜவான் படம் மிகப்பெரிய சாதனையை ஓடிடியில் படைத்துள்ள நிலையில், அடுத்து விஜய்யின் லியோ படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தான் வெளியாக போகிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாக ஹாலிவுட் அனிமேஷன் படமான லியோ ஓணான் படம் தற்போது வெளியாகி குழந்தைகளின் விருப்பப் படமாக மாறியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஆடம் சாண்ட்லர் ஆங்கில வெர்ஷன் லியோவுக்கு குரல் கொடுத்துள்ளார்.

குழந்தைகள் பார்க்கலாம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, மன்சூர் அலி கான், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்த லியோ படம் வரும் நவம்பர் 24ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஆனால், அதீத ஆக்‌ஷன், ஆபாச வசனங்கள், லிப் லாக் முத்தங்கள் என அந்த படம் குழந்தைகள் பார்க்க முடியாத அளவுக்கு உள்ள நிலையில், குழந்தைகளை கவரும் லியோவாக இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ் டப்பிங்கில் இந்த அனிமேஷன் படம் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்களை அந்த படம் கவர்ந்துள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் புதிதாக அனிமேஷன் படங்கள் இந்த ஆண்டு களைகட்டாத நிலையில், நெட்பிளிக்ஸ் ஓவர்டேக் செய்துள்ளது.

Leo animation movie released on Netflix OTT before Vijays Leo

ஸ்குவிட் கேம் 2 ரிலீஸ்: மேலும், நவம்பர் 22ம் தேதியான இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்குவிட் கேம் 2 வெப்சீரிஸும் வெளியாகி உள்ளது. முதல் சீசன் வேறலெவல் வெற்றியை உலகளவில் ஈட்டிய நிலையில், இரண்டாவது சீசனை தற்போது ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X