Leo OTT Release: நெட்பிளிக்ஸில் வெளியாகும் லியோ... ஓடிடி ரசிகர்களுக்கு அடுத்த தீபாவளி ஆரம்பம்!

சென்னை: விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் LCU-ன் கீழ் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்நிலையில் லியோ ஓடிடி ரிலீஸ் எப்போது என காத்திருந்த ரசிகர்களுக்கு, செம்ம அப்டேட் வெளியாகியுள்ளது.

Leo on Netflix: Vijays Leo will premiere on Netflix On Nov 23

லியோ ஓடிடி ரிலீஸ் தேதி
விஜய்யின் 67வது படமாக உருவான லியோ, கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாக லியோ அமைந்தது. இந்நிலையில், லியோ படத்துக்கு தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

லியோ தான் கோலிவுட்டில் முதல் ஆயிரம் கோடி வசூலிக்கும் படமாக இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு எழுந்தது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கெளதம் வாசுதேவ், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோவுக்கு, முதல் நாளில் சிறப்பான ஓபனிங் இருந்தது.

ஆனால், அதன்பின்னர் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், அடுத்தடுத்த நாட்களில் லியோ வசூல் குறைய தொடங்கியது. முதல் நாளில் மட்டுமே 148 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே லியோவுக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், ஏராளமான ரசிகர்கள் இந்தப் படம் பார்க்க தியேட்டர் செல்லவில்லை. ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர். அவர்களுக்காகவே தற்போது தரமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி லியோ திரைப்படம் வரும் 23ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து Leo on Netflix என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இதனால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே தீபாவளிக்காக லியோ ஸ்க்ரீன்கள் குறைக்கப்பட்டன. ஆனால், கார்த்தியின் ஜப்பான் பெரியளவில் சக்சஸ் ஆகவில்லை, அதேநேரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதனால் ஜப்பானுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்க்ரீன்கள் தற்போது லியோவுக்கு கிடைத்துள்ளன. அதேநேரம் லியோ ஓடிடியிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X