Leo OTT Release: லியோ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு... ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றிய நெட்பிளிக்ஸ்!!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களுடன் 600 கோடி ரூபாய் வரை வசூலித்த லியோ, தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அதன்படி லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனாலும் இந்த ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது லியோ படக்குழு.
லியோ ஓடிடி ரிலீஸ் தேதி அபிஸியல் அப்டேட்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் லியோ. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் - லோகேஷ் கூட்டணி லியோவில் இரண்டாவது முறையாக இணைந்தது. இதனால், இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் லியோவில் நடித்திருந்தனர்.
7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான லியோ, கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ரிலீஸாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளில் மட்டுமே சிறப்பான ஓபனிங் இருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை
இதனால் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லியோ, 600 கோடியுடன் திருப்திப் பட்டுக்கொண்டது. அதேபோல், ஏராளமான ரசிகர்கள் லியோ ஓடிடியில் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என திரையரங்குகளுக்குச் செல்லாமல் விட்டுவிட்டனர். இதனால், லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவர்களுக்கு குட் நியூஸ் கொடுத்துள்ள படக்குழு, லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அபிஸியலாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 24ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. அதேநேரம் இந்தியாவில் மட்டுமே 24ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் எனவும், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் நவம்பர் 28ம் தேதியில் இருந்து ஸ்ட்ரீமிங் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் லியோ ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து Leo On Netflix என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் லியோ மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











