பிரேஸர் வீடியோ பார்த்து தான் இந்த சீனை வச்சிருப்பாரு இயக்குநர்.. லைகர் படத்தை விடமாட்டாங்க போல!

சென்னை: விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியான நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

தியேட்டரில் ரிலீஸாகி பலத்த அடி வாங்கிய லைகர் திரைப்படம் தற்போது ஓடிடி ரசிகர்களிடமும் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

அதிலும், விஜய் தேவரகொண்டாவை ஹீரோயின் அனன்யா பாண்டே கடிக்கும் அந்த காட்சி பிட்டு பட வெப்ஸைட் ஆன பிரேஸர் பார்த்துத் தான் இயக்குநர் வைத்திருப்பார் என்று பங்கம் செய்து வருகின்றனர்.

படு தோல்வி

படு தோல்வி

இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான லைகர் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. அந்த படத்தின் டிசாஸ்டர் ரிசல்ட்டுக்கு பிறகு படத்தை தயாரித்த சார்மி சோஷியல் மீடியா பக்கமே வர மாட்டேன் சாமி என ட்ரோல்கள் காரணமாக ட்வீட் போட்டிருந்தார்.

ஓடிடியில் லைகர்

ஓடிடியில் லைகர்

இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் லைகர் திரைப்படம் நேற்று ஓடிடி ரசிகர்களுக்காக வெளியானது. ஓடிடியிலாவது படத்தை பார்க்கலாம் என நினைத்த ரசிகர்கள் முதல் 10 நிமிஷம் கூட பார்க்க முடியவில்லை என கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். எதுக்கு இத்தனை கோடிகளை இப்படி வேஸ்ட் பண்ணிட்டீங்க என மீண்டும் இயக்குநருக்கு பலரும் பாடம் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மைனஸ் 5

மைனஸ் 5

தியேட்டருக்கு போய் இந்த படத்தை பார்த்தவங்க தெய்வம், உலகத்திலேயே மகா மட்டமான படத்தை எடுத்துக் காட்டுறேன்னு இயக்குநர் எடுத்து வச்சிருக்காரு இந்த படத்தை 2 மணி நேரம் 18 நிமிஷம் டோட்டல் வேஸ்ட் என்றும் படத்துக்கு -5 மார்க் தான் தர முடியும் என நெட்டிசன்கள் மீண்டும் மார்க் போட்டு படத்தை மரண பங்கம் செய்து வருகின்றனர்.

பிரேஸர் வீடியோ

பிரேஸர் வீடியோ

இந்நிலையில், இயக்குநர் பூரி ஜெகநாத்தை பிட்டுப் படம் பார்த்து லைகர் படத்தை எடுத்து வச்சிருக்காரு என சில நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஏகப்பட்ட பிரேஸர் வீடியோக்களை பார்த்து தான் பூரி இப்படியொரு சீனை எடுத்து வச்சிருப்பாருன்னு உறுதியா சொல்றேன் என ஒரு நெட்டிசன் கமெண்ட் போட, ஏகப்பட்ட ரசிகர்கள் அதற்கு கீழ் ஆமாம் என கமெண்ட் போட்டு அடித்து நொறுக்கி வருகின்றனர்.

கடிக்கும் நாயகி

கடிக்கும் நாயகி

அந்த பக்கம் அம்மா ரம்யா கிருஷ்ணன் நிற்க, இந்த பக்கம் ஹீரோயின் அனன்யா பாண்டே கையை கடித்துக் கொண்டிருக்க, வலியை பொறுத்துக் கொண்டு அம்மாவிடம் விஜய் தேவரகொண்டா பேசும் காட்சியைத் தான் தற்போது பிட்டு வீடியோவுடன் கம்பேர் பண்ணி கலாய்த்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நிர்வாணமாக கையில் பூங்கொத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகும் போதே தெரியும் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X