OTT Movies: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓடிடியில் மிஸ் செய்யவே கூடாத டாப் 5 அனிமேஷன் படங்கள்!
சென்னை: நமது ஃபிலிமி பீட் தளத்தில் வார வாரம் ஓ.டி.டி தளங்களில் உள்ள தரமான உலக படங்கள் குறித்தும், அவற்றின் கதை குறித்தும் அவை எந்த ஓ.டி.டி தளத்தில் உள்ளது என்பது குறித்தும் விரிவாக பார்த்து வருகின்றோம். அதில் இது நான்காவது வாரம். அந்த வகையில் இந்த கடந்த வாரம் கடலை மையப்படுத்திய தமிழ் டப்பிங் படங்கள் குறித்து பார்த்தோம். இந்த வாரம் குழந்தைகளை மையபடுத்திய படங்கள் குறித்து காணலாம். கீழே குறிப்பிட்டுள்ள படங்கள் அனைத்திலும் குழந்தை வளர்ப்பு தொடங்கி குழந்தைகளின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அனிமேசன் படங்கள் ஆகும். ஒரு சில காட்சிகள் நமது குழந்தைப் பருவத்தை நினைவுக்கு கொண்டுவரவோ அல்லது நம்மையே குழந்தை பருவத்திற்கு அழைத்துச் செல்லவும் கூடச் செய்யலாம். குடும்பத்துடன் அமர்ந்து இந்த படத்தை பாருங்கள்.
1. தி பாஸ் பேபி: 2017ஆம் ஆண்டு வெளியான தி பாஸ் பேபி (The Boss Baby)படம் முழுக்க முழுக்க குழந்தையின் பாசப்போராட்டத்தை மையப்படுத்தி நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்ட அட்டகாசமான அனிமேசன் படம் ஆகும். தி பாஸ் பேபி என்ற பெயரில் வெளியான நாவலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. டாம் மெக்ரத் இந்த படத்தினை இயக்கியுள்ளார். அப்பா அம்மா மற்றும் 7 வயது மகன் என இருக்கும் ஒரு வீட்டில் எங்கிருந்தோ வரும் ஒரு குழந்தை தனது அப்பாவும் அம்மாவும் கொடுக்கும் பாசத்தால் ஏற்பட்ட ஏக்கமும் கோபமும் 7 வயது மகனை என்ன செய்கின்றது என்பதுதான் கதை. படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

2. லியோ: 2023ஆம் ஆண்டு வெளியான லியோ (LEO)படம் அனிமேசன் படமாகவும் அதேநேரத்தில் அட்வென்சர் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மையக் கதாபாத்திரமாக லியோ என்ற பல்லிவகையைச் சார்ந்த ஓணான் உள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் பெரியவர்களும் பார்க்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படத்தில் மார்டன் பேரண்டிங் குறித்து பல்வேறு காட்சிகள் மூலம் சொல்லப்பட்டு இருப்பதால் குடும்பத்துடனே இந்த படத்தைப் பார்க்கலாம். 70 வயதைக் கடந்த லியோ தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வகுப்பறையிலேயே கழித்து விட்டதால், வெளியுலகைச் சுற்றிப் பார்க்க வருகின்றது. அப்போது நடப்பதை கற்பனையாக படமாக்கியுள்ளனர். படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.
3. மினியன்ஸ்: இந்த படம் எண்டர்டைமெண்ட்டுக்காக எடுக்கபப்ட்ட படம் என்றாலும் மினியன்ஸ் (Minions) படத்தில் உலகத்தின் பரிணாம வளர்ச்சியை படத்தின் தொடக்க காட்சிகளில் சிறப்பாக காட்டியிருப்பார்கள். மினியன்ஸ் இந்த உலகத்தில் தோன்றிய பின்னர் தன்னை விட பலமான ஒருவரை தனது பாஸாக தேர்வு செய்து, தனது பாஸ்க்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, செயல்படுவார்கள். இதனால் மினியன்ஸ் முதலில் டைனோசரை தனது பாஸாக தேர்வு செய்யும் அதன் பின்னர், மனிதனை தனது பாஸாக தேர்வு செய்து கொள்வார்கள். இதனால் அவர்கள் எதிர்கொள்வதை மிகவும் நகைச்சுவையாக படத்தினை எடுத்திருப்பார்கள். படத்தின் அனிமேசன் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது. படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது. இந்த படத்தில் இதுவரை மூன்று பாகங்கள் வந்துள்ளது.
4. தி சீ பீஸ்ட்: கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தி சீ பீஸ்ட் படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி, அட்வென்சர் மற்றும் காமெடி நிறைந்த அனிமேசன் திரைப்படம் ஆகும். படத்தின் கதாநாயகன் ஒரு வேட்டைக்காரன். அவன் கடலில் உள்ள ஒரு பெரிய மிருகத்தை கொல்ல தனது கப்பலில் வருகின்றார். அந்த கப்பலுக்குள் வேட்டைக்காரனுக்கே தெரியாமல் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒரு குழந்தை வந்துவிடுகின்றார். இவர்கள் இருவரும் இணைந்து கடலில் உள்ள பெரிய மிருகத்தை எப்படி கொல்லுகின்றனர் என்பது தான் படத்தின் கதை. படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கிலேயே உள்ளது.
5. ஒரியன் அண்ட் டார்க்: பூனை, பூச்சி, நாய் உள்ளிட்ட விலங்குகள் உள்ளிட்ட எதைப் பார்த்தாலுமே பயப்படும் சிறுவன் ஓரியன். முனி படத்தில் வரும் ராகவா லாரன்ஸ் மாதிரி இருட்டைப் பார்த்தாலும் பயம் என்கின்றான். இவனது பயத்தைப் போக்க இரவின் உருவமாக இருக்கக்கூடிய டார்க் உதவி செய்கின்றது. இந்த கதையை காமெடியாவும் அட்வென்சராகவும் இந்த படத்தை இயக்கியிருப்பார் ஷேன் சர்மார்ட்ஸ். படம் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் உள்ளது. படம் குழந்தைகளுக்கு பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











