OTT Movies: ஓடிடியில் கலக்கி வரும் டாப் 5 காமெடி தமிழ் டப்பிங் படங்கள்.. இந்த வாரம் உங்களுக்காக!

சென்னை: நமது ஃபிலிமி பீட் தளத்தில் வார வாரம் ஓ.டி.டி தளங்களில் உள்ள தரமான உலக படங்கள் குறித்தும், அவற்றின் கதை குறித்தும் அவை எந்த ஓ.டி.டி தளத்தில் உள்ளது என்பது குறித்தும் விரிவாக பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இந்த கடந்த வாரம் க்ரைம் த்ரில்லர் படங்கள் குறித்து பார்த்தோம். இந்த வாரம் காமெடி படங்கள் குறித்து காணலாம்.

1. கிளிக்: 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திப்ன் ஹீரோவிடம் ரிமோட் ஒன்று கிடைக்கின்றது. இந்த ரிமோட் மூலம் நேரத்தை நிறுத்த முடியும். கடந்த காலத்திற்குச் செல்ல முடியும். ஒரு நபரைக் கூட தனியாக ஃப்ரீஸ் செய்ய முடியும். அப்படியான ரிமோட்டைக் கொண்டு கதாநாயகன் என்ன செய்கின்றான் என்பதுதான் கதை. படம் முழுக்க முழுக்க செம காமெடி படம் என்பதால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. ஃபிராங் கொராசி இயக்கியுள்ள இந்த படத்தினை நெட்ஃபிலிக்ஸ் மற்றும், அமேசான் ஓடிடி தளத்தில் காணலாம். தமிழ் டப்பிங்கிலேயே உள்ளது.

OTT Comedy Movie Entertainment

2. டாக்டர்.டோலிட்டில்: 1998ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இதுவரை 5 பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து பாகங்களும் தனித்தனிக் கதை என்பதால் எந்த பாகத்தில் இருந்து வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். ஸ்டீவ் கார் இயக்கியுள்ள இந்த படத்தில் மிருகங்கள் பேசுவது ஒரு டாக்டருக்கு கேட்கும். இதனால் மிருகங்கள் செய்யும் சேட்டைகளை டாக்டர் எப்படி தடுக்கின்றார். மிருகங்கள் மூலம் தனக்கு சாதகமான விஷயங்களை எவ்வாறு செய்கின்றார் எனதுதான் கதை. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் அமேசான் பிரைமிலும் உள்ளது. தமிழ் டப்பிங்கிலேயே உள்ளது.

3. பேட் பாய்ஸ்: பிரபல பாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் மார்டின் லாரன்ஸ் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான பேட் பாய்ஸ் திரைப்படம் நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாக்கப்பட்டது. மைக்கேல் பே இயக்கிய இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் நெட் ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் உள்ளது.

OTT Comedy Movie Entertainment

4. ஷாலின் ஷாக்கர்: இந்த படம் 2001ஆம் ஆண்டு வெளியான சீன படமாகும். ஸ்டீபன் ஸ்டோவ் இயக்கிய இந்த படம் கால்பந்து விளையாட்டில் வெல்வதற்காக தனது நண்பர்களை தேடிச் சென்று அவர்களை திரட்டி போட்டியை வெல்லும் கதாநாயகனை மையப்படுத்தியது. முழுக்க முழுக்க நகைச்சுவைத் திரைப்படமான இப்படமும் தமிழ் டப்பிங்கிலேயே உள்ளது. இந்த படம் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் உள்ளது.

5. ஹேங் ஓவர்: 2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஹேங் ஓவர். இந்த படம் ஆங்கிலத்தில் எந்த அளவிற்கு காமெடியாக உள்ளதோ அதே அளவிற்கு தமிழ் டப்பிங்கிலும் காமெடியாக இருக்கும். இந்த படத்தில் வரக்கூடிய ஆலன் கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படமும் பல பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இது நெட் ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் ஓடிடி தளத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X