OTT Movies: கொரியன் படங்களின் தீவிர ரசிகரா நீங்கள்! ஓடிடியில் மிஸ் செய்யவே கூடாத 5 கொரியன் படங்கள்!
சென்னை: நமது ஃபிலிமி பீட் தளத்தில் வார வாரம் ஓ.டி.டி தளங்களில் உள்ள தரமான உலக படங்கள் குறித்தும், அவற்றின் கதை குறித்தும் அவை எந்த ஓ.டி.டி தளத்தில் உள்ளது என்பது குறித்தும் விரிவாக பார்த்து வருகின்றோம். அதில் இது ஐந்தாவது வாரம். அந்த வகையில் இந்த கடந்த வாரம் குழந்தைகளின் வாழ்க்கை முறையை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட் அனிமேசன் படங்கள் குறித்து பார்த்தோம். இந்த வாரம் ஓடிடி தளங்களில் உள்ள கொரியன் படங்கள் குறித்து பார்க்கலாம்.
1. Badland Hunters: 2024ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கொரியப் புகழ் டாங்- சியோக் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை என்னவென்றால், உலகமே அழிந்த பின்னர், ஒரு இடம் மட்டும் இன்னும் அழியாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்ற பகுதியில் உணவுக்கு போராடிக் கொண்டு இருப்பவர்களை நாங்கள் உங்களுக்கு உணவு தருகின்றோம் எனக் கூறி அழைத்து வந்து ஏதோ ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதாகக் கூறி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கண்டு பிடிக்கும் நமது ஹீரோ அதனைத் தடுக்க சண்டை செய்கின்றார். அதிரடியான சண்டைக் காட்சிகளால் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் படம் முழுக்க த்ரில்லிங்காகவே இருக்கின்றது. படம் நெட் ஃபிலிக்ஸில் தமிழ் டப்பிங்கில் உள்ளது.

2. The Point Men: 2023ஆம் ஆண்டு வெளியான தி பாய்ண்ட் மேன் என்ற படத்தின் கதை கிட்டத்தட்ட நமது ஊர் விஜயகாந்த் ஸ்டைலில் உள்ளது என்றே கூறலாம். கொரியாவில் உள்ள சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் கடத்தி விடுகின்றனர். அதன் பின்னர் கொரிய அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை வைத்து அதனை நிறைவேற்றினால் சுற்றுலாப் பயணிகளை விடுவோம் எனக் கூறுகின்றனர். இதனால் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து ஒருவரை அனுப்பி, சுற்றூலாப் பயணிகளை மீட்கின்றனர். உண்மைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால், படம் உண்மையிலேயே சிறப்பான படம் எனக் கூறலாம். இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
3. Smugglers: 6 பெண்கள் இணைந்து கடலுக்கு அடியில் சென்று முத்து எடுத்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் கனவு காணும் வாழ்க்கைக்கு முத்துக் குளிப்பதால் கிடைக்கும் பணம் போதவில்லை. இவர்கள் குறித்து தெரிந்து கொண்ட சட்டவிரோத கும்பல் இவர்களின் உதவியை நாடுகின்றது. இறுதியில் என்ன ஆனது என்பது கதை. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம் என இந்தப் படத்தின் வெறித்தனமான ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படம் 2023ஆம் ஆண்டு வெளியான இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது.

4. Emergency Declaration: 2021ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நாம் கற்பனையே செய்து பார்க்காத அளவுக்கு எடுத்திருப்பார்கள். குறிப்பாக க்ளைமேக்ஸ் எல்லாம் நம்மை நடுங்கச் செய்யும் அளவிற்கு எடுத்திருக்கின்றார்கள். படத்தின் கதை என்னவென்றால், ஒரு விமானத்தில் அனைவரும் சென்று கொண்டு உள்ளனர். திடீரென ஒருவர் விமானத்தில் வைரஸைப் பரப்புவதாக கூறி வைரஸைப் பரப்பிவிட்டு இறந்து விடுகின்றார். இதனால் பறக்கும் விமானத்தில் பரப்பப்பட்ட வைரஸில் இருந்து அனைவரும் எப்படி காப்பாற்றப்பட்டனர் என்பது படத்தின் மீதிக்கதை. படம் அமேசான் பிரைமில் உள்ளது.
5. The Roundup: இந்தப் படத்திலும் டாங்- சியோக் நடித்துள்ளார். கொரியாவில் உள்ள சுற்றுலாப் பயணிகளை கடத்திக் கொள்ளும் சீரியல் கில்லரைக் கதாநாயகன் தேடிப்பிடித்து கொல்வது எப்படி என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் மொத்தம் மூன்று பாகங்களாக வந்துள்ளது. மூன்று பாகங்களும் வேறுவேறு கதை. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிரப்பப்பட்டுள்ளது. படம் அமேசான் பிரைமில் உள்ளது.


Click it and Unblock the Notifications











