OTT Release: உகாதி, ரம்ஜான் ஸ்பெஷல்.. ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன?

சென்னை: தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் என அடுத்தடுத்து விடுமுறை வந்து இருக்கும் நிலையில், சினிமா பிரியர்களை வளைத்துப்போடும் அளவிற்கு இந்த வாரம் பல ஓடிடி தளங்களில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

போர்த் ஃப்ளோர்: பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜூன் நடிப்பில் சுந்தர பாண்டி இயக்கத்தில் பிப்ரவரி 27ந் தேதி வெளியானத் திரைப்படம் 'Fourth Floor' (போர்த் ஃப்ளோர்). க்ரைம் தில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் நாயகியாக தீப்ஷிகா நடிக்க, பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மார்ச் 20ந் தேதி வெளியானது.

OTT Netflix Amazon OTT
Photo Credit:

சீதா பயணம்: அர்ஜுன் இயக்கத்தில் அவரின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'சீதா பயணம்' என்ற புதிய திரைப்படம் பிப்ரவரி 14ந் தேதி வெளியானது. இதில் ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் கதாநாயகனாக நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்தை அர்ஜுனின் 'ஸ்ரீராம் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் சன் நெக்ட் தளத்தில் மார்ச் 19ந் தேதி வெளியானது.

யோகி டா: நடிகர் விஷாலின் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா நடிப்பில், கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் யோகிடா. பெண்களை மையமாகக் கொண்ட ஆக்சன் திரைப்படம் பிப்ரவரி6ந் தேதி தியேட்டரில் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த படம் மார்ச் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த படத்தை தியேட்டரில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.

OTT Netflix Amazon OTT
Photo Credit:

பார்டர் 2: சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித் தோசஞ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்டர் 2. 1971 ஆண்டில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போரை பின்னணியாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் நல்ல வசூலை அள்ளியது. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 20ஆம் தேதியான நேற்று வெளியானது.

காசர்கோடு எம்பஸி: ஆதிஷ் எம். நாயர் இயக்கத்தில், ஒரு ஆபத்தான மோசடி கும்பலையும், அதன் வலையில் சிக்கிக்கொண்ட இருவரையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மலையாள திகில் வெப் தொடர் தான் காசர்கோடு எம்பஸி. அபு சலீம், கோவிந்த் பாய், ரோனி டேவிட், சுதீஷ், கபீர் துஹான் சிங் மற்றும் தீபக் பரம்போல் ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் 20தேதி ZEE5 ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X