தியேட்டர்ல மட்டுமில்லீங்க... ஓடிடிக்கும் வர்றோம்... வரிந்துக்கட்டும் திரைப்படங்கள்

சென்னை : இந்திய அளவில் கொரோனா காரணமாக வைக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாக அஜித், விஷால் உள்ளிட்டவர்களின் படங்கள் வரிசைக்கட்டி வருகின்றன.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஓடிடி ரிலீஸ் படங்கள்

திரைத்துறையில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளோம். தொழில்நுட்ப வளர்ச்சி அதிரித்துள்ள நிலையில், படங்கள் ஓடிடியில் ரிலீசாவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டபோது இந்த ஓடிடி ரிலீஸ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் நஷ்டத்திலிருந்து தப்பிக்க சிறப்பாக கைகொடுத்தது.

சிறிய பட்ஜெட் படங்கள்

சிறிய பட்ஜெட் படங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நடிகர்களின் படங்களும் ஓடிடியில் ரிலீசானது. தொடர்ந்து தற்போதும் வாரத்திற்கு 4 படங்களாவது ஓடிடியில் ரிலீசாகிறது. சிறப்பான கதைக்களத்துடன் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லாத சிறிய பட்ஜெட் படங்களுக்கு சிறப்பாக கைக்கொடுக்கிறது ஓடிடி.

ஒடிடியில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள்

ஒடிடியில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள்

இதன்மூலம் சிறந்த கதைகளும் வெளியாகும் இத்தகைய ஓடிடி படங்களை தங்களது வீட்டிலேயே ஹோம் தியேட்டர் மூலமோ, டிவி அல்லது மொபைலிலோ கூட பார்த்துக் கொள்ள முடிகிறது. சிறிய பட்ஜெட் மட்டுமின்றி பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன.

சூர்யா, தனுஷ் படங்கள்

சூர்யா, தனுஷ் படங்கள்

அந்த வகையில் சூர்யாவின் அடுத்தடுத்த சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. தனுஷ் -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ஜகமே தந்திரம் படமும் ஓடிடியில்தான் ரிலீசானது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் திரையில் ரிலீசான படங்கள் அடுத்தடுத்து ஓடிடியிலும் ரிலீசாகின்றன.

ஓடிடியில் நேரடி ரிலீஸ்

ஓடிடியில் நேரடி ரிலீஸ்

திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு இது சிறப்பாக கைக்கொடுக்கிறது. இந்நிலையில் அடுத்தடுத்து திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள பிரபல படங்கள் எந்தெந்த ஓடிடியில் அடுத்ததாக ரிலீசாக உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

ஜீ5ல் அஜித் படம்

ஜீ5ல் அஜித் படம்

பிப்ரவரி மாத இறுதியில் வெளியாக உள்ளதாக கூறப்படும் வலிமை படம் அடுத்ததாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதேபோல விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் ஜீ5லிலேயே ரிலீசாக உள்ளது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனின் டான் மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்கள்திரையரங்குகளில் ரிலீசான பின்பு நெட்பிளிக்சில் வெளியாக உள்ளன.

அமேசான் பிரைமில் கேஜிஎப்2

அமேசான் பிரைமில் கேஜிஎப்2

பாலிவுட்டில் அமீர்கானின் லால் சிங் சத்தாவும் ஆர்ஆர்ஆர் மற்றும் ஜெர்சி படங்களும் திரையரங்க ரிலீசுக்கு பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமேசான் பிரைமில் கேஜிஎப் 2, பச்சன் பாண்டே, பிரித்விராஜ், ஷாம்ஷெரா, ஜெயஷோபா ஜோர்தார் சிரஞ்சீவியின் ஆர்ச்சார்யா போன்ற படங்கள் தியேட்டர் ரிலீசுக்கு பிறகு வெளியாகவுள்ளன.

Recommended Video

OTT ரிலீஸ் ஏன்? | Muthalum Nee Mudivum Nee | Darbuka Siva | Tamil Filmibeat
பிரம்மாண்ட படங்கள்

பிரம்மாண்ட படங்கள்

இந்தப் படங்கள் அனைத்துமே இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள படங்கள். இவை அனைத்தும் ஏறக்குறைய திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையல், அடுத்ததாக ஓடிடி தளங்களிலும் ரிலீசாக உள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X