கிறிஸ்துமசையொட்டி இந்த வாரத்தில் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள்... பட்டியல் நீளமா இருக்கே!

சென்னை : கிறிஸ்துமசையொட்டி இந்த வாரத்தில் அதிகமான படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன.

இந்நிலையில் ஒரு பக்கம் ஓடிடியிலும் தமிழ், மலையாளம், இந்தி என படங்கள் வெளியாகவுள்ளன.

அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள மின்னல் முரளி, தனுஷின் அட்ராங்கி ரே உள்ளிட்ட படங்களும் இந்த பட்டியலில் உள்ளன.

பாதுகாப்பான கொண்டாட்டம்

பாதுகாப்பான கொண்டாட்டம்

திரைப்படங்களை திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும் அது மட்டுமே சிறப்பான அனுபவத்தை கொடுக்க முடியும் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால் கொரோனா நமக்கு பாதுகாப்பு வழிமுறைகளை மட்டுமின்றி, கொண்டாட்டங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கற்றுக் கொடுத்துள்ளது.

ஓடிடி அனுபவம்

ஓடிடி அனுபவம்

அந்த வகையில் புதுப்படங்களை திரையரங்குகளில் மட்டுமே கண்டுகளித்து வந்த ரசிகர்கள் மாதாந்திர திட்டங்களின் மூலம் ஓடிடியிலும் பார்க்க முடியும் என்பதை அறிந்துள்ளனர். திரையரங்குகளில் பார்க்கும் அனுபவத்தை இந்த ஓடிடி கொடுக்க முடியாவிட்டாலும், நல்ல படங்களை குடும்பத்தினருடன் பார்க்கும் சந்தோஷத்தை கொடுத்து வருகிறது.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஓடிடி ரிலீஸ் படங்கள்

அந்த வகையில் இந்த கிறிஸ்துமசையொட்டி ஏராளமான படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கிடையில் ஓடிடியிலும் அதிகமான படங்கள் இந்த வாரத்தில் வெளியாக உள்ளது. ஏறக்குறைய 10 படங்களுக்கும் மேல் இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மின்னல் முரளி ரிலீஸ்

மின்னல் முரளி ரிலீஸ்

மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மின்னல் முரளி படம் இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். பாசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ளது.

நெட்பிளிக்சில் ரிலீஸ்

நெட்பிளிக்சில் ரிலீஸ்

முதலில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இந்தப் படம் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ஓடிடியில் அட்ராங்கி ரே

ஓடிடியில் அட்ராங்கி ரே

அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள அட்ராங்கி ரே டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் 24ம் தேதி நேரடியாக ரிலீசாக உள்ளது. தனுஷ், அக்ஷய், சாரா அலிகான் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ளது.

மாதுராம் ஓடிடியில் ரிலீஸ்

மாதுராம் ஓடிடியில் ரிலீஸ்

அடுத்ததாக மலையாளத்தில் காதல் கதையாக உருவாகியுள்ள படம் மாதுராம். இந்தப் படத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஸ்ருதி ராமசந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப் படம் சோனி லைவ்வில் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது.

ஓடிடிக்கு வரும் மாநாடு

ஓடிடிக்கு வரும் மாநாடு

இதனிடையே சோனி லைவ்வில் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ள படம் சிம்புவின் மாநாடு. இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ஏறக்குறைய ஒரு மாதம் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிவரும் நிலையில் தற்போது ஓடிடியிலும் ரிலீசாக உள்ளது.

ப்ளட் மணி ஓடிடியில் ரிலீஸ்

ப்ளட் மணி ஓடிடியில் ரிலீஸ்

பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ப்ளட் மணி படத்தை சர்ஜூன் கேஎம் இயக்கியுள்ளார். படத்தில் பிரியா பவானி சங்கர் உணர்ச்சிகரமான பத்திரிகையாளராக நடித்துள்ளார். படம் வரும் 24ம் தேதி நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஜி5ல் அடுத்தடுத்த படங்கள்

ஜி5ல் அடுத்தடுத்த படங்கள்

இதேபோல நாக சௌர்யா, ரிது வர்மா மற்றும் முரளி ஷர்மா நடிப்பில் உருவாகியுள்ள வருது காவலேனு படமும் பஜ்ரங்கி 2 கன்னட படமும் ஜி5 ஓடிடியில் இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படங்கள் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

ஜான் ஆப்ரஹாமின் படம்

ஜான் ஆப்ரஹாமின் படம்

இதனிடையே பாலிவுட் படமான சத்யமேவ ஜெயதே 2 படம் அமேசான் பிரைமில் இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது. ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

அமேசான் ப்ரைம் ரிலீஸ்

அமேசான் ப்ரைம் ரிலீஸ்

இதேபோல ஹாலிவுட் படமான Being the Ricardos படமும் அமேசான் ப்ரைமில் இந்த வாரத்தில் ரிலீசாக உள்ளது. படத்தை இயக்கியுள்ளார் ஆரோன் சோர்க்கி. திருமணம் மற்றும் கேரியரில் ஏற்படும் பிரச்சினைகள் அதன் தீர்வு குறித்து பேசுகிறது இந்தப் படம்.

சோனியில் ரிலீசாகும் தெலுங்கு படம்

சோனியில் ரிலீசாகும் தெலுங்கு படம்

அடுத்ததாக தெலுங்கில் இந்த வாரத்தில் கிறிஸ்துமசையொட்டி WWW படம் சோனி லைவ்வில் ரிலீசாக உள்ளது. படத்தில் அதித் அருண் மற்றும் ஷிவானி ராஜசேகர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் கேவி குகன்.

வரிசைகட்டும் ஓடிடி ரிலீஸ் படங்கள்

வரிசைகட்டும் ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஒருபக்கம் திரையரங்குகளில் இந்த வாரத்தில் அதிகமான படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டியுள்ள நிலையில், ஓடிடியிலும் ஏறக்குறைய 10 படங்கள் ரிலீசாக உள்ளன. இந்த வாரத்தில் பரிட்சையை முடித்துவிட்டு குழந்தைகள் வீட்டில் இருக்கும் நிலையில் இந்த விடுமுறையை கொண்டாடும்வகையில் அதிகமான படங்கள் ரிலீசாகவுள்ளது சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X