OTT releases: புஷ்பா 2 பாத்தாச்சா? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்ன தெரியுமா?
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான், கேம் சேஞ்சர், படைத்தலைவன், காதலிக்க நேரம், மெட்ராஸ்காரன், நேசிப்பாயா என 8 திரைப்படங்கள் வெளியாகின. இதில் வணங்கான் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து, கடந்த வாரம் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இந்த வாரம் தியேட்டரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அந்த படத்திற்கு போட்டியாக ஓடிடியில் அதிரடியான பலத்திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
புஷ்பா 2: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் Netflix ஓடிடி தளத்தில் 30ந் தேதி வெளியானது. தியேட்டரில் நான்கே நாட்களில் 400 கோடியை தொட்ட இத்திரைப்படம் ஓடிடியிலும் டிரெண்டிங்கில் உள்ளது. உலக அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட திரைப்படமாக புஷ்பா 2 படம் சாதனை படைத்துள்ளது.

The Secret of Shiledars: சத்ரபதி சிவாஜி மகாராஜின் மறைந்திருக்கும் பொக்கிஷம் தொடர்பான மர்மத்தை மையமாக வைத்து ஆதித்யா சபோத்தர் இயக்கிய திரைப்படம் தான் தி சீக்ரெட் ஆஃப் ஷிலேடர்ஸ். இதில் ராஜீவ் கண்டேல்வால், சாய் தம்ஹங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழ் மற்றும் இந்தியில் Disney+ Hotstarல் பார்க்கலாம்.
Identity: மலையாள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் தான் Identity. இப்படத்தை அகில் பால், அனஸ் கான் இணைந்து இயக்கி உள்ளனர். Zee5ல் படத்தை வெளியாகி உள்ள இந்த படத்தை, த்ரிஷா, டோவினோ தாமஸ், அஜு வர்கீஸ், வினய் ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Marco: உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ், அபிமன்யு எஸ் திலகன், கபீர் துஹான் சிங், அன்சன் பால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஹனீப் அடேனி இயக்கி இருந்தார். டிசம்பர் 20ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. மார்கோ என்ற மனிதனைச் சுற்றிய கதையாக
Rekhachithram: ஆசிப் அலி மற்றும் அனஸ்வர ராஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ரேகாசித்திரம், அண்மையில் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. மலை கிராமத்தில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் கதையைச் சுற்றி இந்தப் படம் உருவாகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபரின் தற்கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்படும்போது அந்த அதிகாரியின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது அது என்ன என்பது தான் படத்தின் கதை. இப்படத்தில் மம்முட்டி ஒரு சிறிய ரோலில், AI இன் உதவியுடன் வருகிறார். இப்படம் இந்த மாதம் OTT தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications











