ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. சினிமா பிரியர்களே படம் பார்க்க ரெடியா?

சென்னை : கொரோனாவுக்கு முன் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த ஓடிடி தளங்கள் இன்று, அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன.

தியேட்டரில் வெளியான இரண்டே வாரத்தில் அதிரடியாக ஓடிடியில் படங்கள் வெளியாகி விடுகின்றன. திரையரங்கில் படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் விரும்பும் நேரத்தில் படத்தை பார்க்கலாம். படங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு வெப் தொடர்களும் வாரா வாரம் வெளியாகி வருகின்றன.

தொலைக்காட்சியில் சீரியலைப் பார்த்து கடுப்பாகிப்போன ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த தொடர்களை விரும்பும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் பற்றி ஒரு பார்வை.

தி கிரேட் இந்தியன் கிச்சன்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் அதே பெயரில் தமிழில் பிப்ரவரி 3ந் தேதி வெளியானது. இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகி சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்தர், மாமனாராக நந்தகுமார் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஜி5 ஓடிடி தளத்தில் மார்ச் 3ந் தேதி இப்படத்தை பார்க்கலாம்.

தலைக்கூந்தல்

தலைக்கூந்தல்

நடிகர் சமுத்திரக்கனி ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் தலைக்கூத்தல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 3ந் தேதி வெளியாக உள்ளது.

குல்மோஹர்

குல்மோஹர்

பேமிலி மேன் வெப் தொடர் மூலம் நம் மனங்களை வென்ற மஜோன் பாஜ்பாய் நடித்திருக்கும் தொடர்தான்'குல்மோஹர்' புதிய நகரத்தில் ஒரு புதிய வீட்டிற்கு குடியேறும் ஒரு குடும்பத்தின் சிக்கலான உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு கதையாகும். இதில் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர், சூரஜ் சர்மா, காவேரி சேத், அமோல் பலேகர், சிம்ரன் மற்றும் உத்சவி ஜா ஆகியோர் நடித்துள்ளனர். இது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

மீட்டிங் யூ

மீட்டிங் யூ

MX பிளேயரில் இன்று வெளியாகி உள்ள வெப் தொடர் தான் 'மீட்டிங் யூ' இதில், லீ ஜங்-ஷின், சியோ ஜி-ஹூன் மற்றும் பலர் நடித்த சீன மொழி தொடராகும். முற்றிலும் வேறுபட்ட உலகங்களில் வசிக்கும் இருவர் தான் கதையின் மையக்கரு. இவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது, அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அது காலப்போக்கில் விசித்திரமான நட்பாக மாறி வலுவடைகிறது.

மாய தோட்டா

மாய தோட்டா

சின்னத்திரை சீரியல் இணைந்து நடித்திருக்கும் வெப் தொடர் தான் மாய தோட்டா. இதில் சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ், குமரன் தங்கராஜன், வைஷாலி தனியா ஆகியோர் நடித்துள்ளனர். ஹங்காமாவில் இந்த புதிய வெப் தொடரை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X