OTT Movies: ஓடிடியில் மிஸ் செய்யவே கூடாத டாப் 5 கடல் சார்ந்த படங்கள்! இந்த வாரம் உங்களுக்காக!

சென்னை: நமது ஃபிலிமி பீட் தளத்தில் வார வாரம் ஓ.டி.டி தளங்களில் உள்ள தரமான உலக படங்கள் குறித்தும், அவற்றின் கதை குறித்தும் அவை எந்த ஓ.டி.டி தளத்தில் உள்ளது என்பது குறித்தும் விரிவாக பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இந்த கடந்த வாரம் காமெடி தமிழ் டப்பிங் படங்கள் குறித்து பார்த்தோம். இந்த வாரம் கடலை மைய்யபடுத்திய படங்கள் குறித்து காணலாம். கீழே குறிப்பிட்டுள்ள படங்கள் அனைத்திலும் கடலை மிகவும் அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஒரு சில காட்சிகளில் நாமே அங்கிருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் வகையில் காட்சி படுத்தப்பட்டிருக்கும். கட்டாயம் பாருங்கள்.

1. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: கடல் சார்ந்த படம் என்றாலே அதில் கட்டாயம் பெரும்பாலான சினிமா ரசிகர்களின் மனதில் தோன்றக்கூடிய படம் ஜானி தீப் நடிப்பில் வெளியான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம்தான். இந்த படம் மொத்தம் 5 பாகங்களாக வெளி வந்துள்ளது. படத்தின் மைய்யக் கதாபாத்திரமான கேப்டன் ஜாக் ஸ்பேரோவ் கதாபாத்திரத்திற்காகவே படத்தினை பலமுறை பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஐந்தாவது பாகத்தில் கேப்டன் பர்போஸா தனது உயிரை தியாகம் செய்வதைப் பார்க்கும்போது பைரேட்ஸ் ஆஃப்தி கரீபியன் படத்தின் ரசிகர்களுக்கு கண்ணீரே வந்துவிட்டது எனலாம். மிகவும் சீரியஸான கதையை நகைச்சுவையான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பார்கள். இந்த படம் தமிழிலேயே உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது.

OTT Entertainment

2. லைஃப் ஆஃப் பை: லைஃப் ஆஃப் பை என்ற நாவலை மைய்யப்படுத்தி கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான சர்வைவல் படம் என்றே இதனைக் கூறலாம். 16வது இந்தியச் சிறுவனும் ரிச்சர்ட் பார்க்கர் எனப்படும் வங்கத்து புலியும் ஒரு படகில் பசுபிக் பெருங்கடலில் ஒரு விபத்தின் காரணமாக மாட்டிக் கொள்கின்றார்கள். ஒரு சிறிய படகில் ஒரு சிறுவனும் பசியோடு இருக்கும் புலியும் எவ்வாறு தங்களது நாட்களைக் கழிக்கிறார்கள். இறுதியில் யார் உயிர்பிழைக்கிறார் என்பதை மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் காட்சி படுத்தியிருப்பார்கள். இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

3. காஸ்ட் அவே: விமான விபத்தினால் கடலில் விழுந்து அங்கிருந்து தனித்தீவிற்கு வந்த கதாநாயகனைப் பற்றிய கதைதான் இது. தனித்தீவில் மாட்டிக்கொண்ட கதாநாயகன் எப்படி உயிர் பிழைத்தான் என்பதும் சுமார் 1600 நாட்களுக்கு மேல் தனித்தீவில் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பதை தத்ரூபமாக படமாக்கியிருப்பார்கள்.செலவு என்பது இந்த படத்திற்கு மிகவும் குறைவு. ஆனாலும் இந்த படம் உலகம் முழுவதும் இப்போதும் பாராட்டப்படும் படங்களின் வரிசையில் உள்ளது. பல சினிமா சார்ந்த வகுப்புகளில் இந்த படம் குறித்து விவாதிக்கப்படுகின்றது. தனிமை நம்மை என்ன செய்யும் என்பதை இந்த படம் விளக்கியிருக்கும். இந்த படம் ஹெச்.பி.ஓ ஓடிடி தளத்தில் உள்ளது.

4. கேப்டன் பிலிப்ஸ்: கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி படம்தான் கேப்டன் பிலிப்ஸ். இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க கப்பலை திருடும் சோமானிய கடற்கொள்ளையர்கள் எவ்வாறு கப்பலைக் கைப்பற்றினார்கள், கேப்டனை பிணையக் கைதியாக மாற்றி அமெரிக்க அரசிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இறுதியில் நான்கு கடற்கொள்ளயர்களில் மூவரைச் சுட்டுக் கொன்றும் ஒருவரை உயிருடனும் அமெரிக்கா பிடித்திருக்கும். கேப்டன் பிலிப்ஸும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பார். இந்த படம் ஃபுபொ டீவி ஓடிடி தளத்தில் உள்ளது.

5. அட்ரிஃப்ட்: 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மைய்யப்படுத்திய கதைதான் இந்த படம். பசுபிக் பெருங்கடலில் கணவன் மனைவி இருவரும் தனியாக ஒரு மோட்டார் படகில் செல்கின்றனர். கடலில் ஏற்படும் புயலினால் அவர்கள் சென்ற படகு பாதிக்கப்படுகின்றது. மொத்தம் 41 நாட்கள் அந்த உடைந்த படகில் எப்படி உயிர் வாழ்ந்தார்கள், உணவுக்கு என்ன செய்தார்கள் என்பதை மைய்யப்படுத்திய கதைதான் இது. அட்டகாசமான திரைக்கதைக்காக பெரும் பாராட்டைப் பெற்ற படம் இது. இந்த படம் நெட் ஃபிலிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X