Ott Comedy Movies: ஒரே சிரிப்பு.. ஓடிடி தளத்தில் இருக்கும் அட்டகாசமான 5 காமெடி தமிழ் டப்பிங் படங்கள்!
சென்னை: இணையம் வளர்ந்த பின்னர், ஓடிடி தளத்தில் படங்கள் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக, சமகாலத்தில் ரிலீஸ் ஆகும் படங்களைக்கூட காத்திருந்து ஓடிடி தளத்தில் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் ஓடிடி தளத்தில் இருக்கும் படங்களை அதன், வகைக்கு ஏற்றவகையில் ரசிகர்கள் தேடித்தேடி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் எந்தெந்த ஓடிடி தளத்தில் இருக்கும் சிறப்பான 5 காமெடி, தமிழ் டப்பிங் படங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.
1. புல்லட் ட்ரைன்: இந்தப் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம். இந்தப் படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மரியா பீட்டில் என்ற நாவலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டது. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியாகவும் அதேநேரத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளுடனும் இந்தப் படம் உள்ளதால், ரசிகர்களுக்கு இந்தப் படம் பொழுதுபோக்குக்கு அட்டகாசமான படமாக இருக்கும். டேவிட் லீச் இயக்கியுள்ள இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக மாறியது. நெட் பிளிக்ஸில் உள்ளது.

2. 17 Again: 2009ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தினை இயக்கியவர், பர் ஸ்ட்யர்ஸ். படத்தில் கதாநாயகனாக ஜாக் எஃப்ரான் நடித்துள்ளார். கதையின்படி, கதாநாயகனுக்கு கூடைப்பந்து விளையாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் ஆகவேண்டும் என ஆசை. ஆனால், குடும்பச் சூழல் காரணமாக, அவர் தனது வாழ்க்கையை வேறுவிதமாக கட்டமைத்துக் கொள்கின்றார். அவருக்கு 37 வயது ஆன பின்னர், மீண்டும், 17 வயதுக்கு வந்துவிடுகின்றார். வாழ்க்கையில் இரண்டாவது சான்ஸ் கிடைக்கும்போது அவர் என்ன செய்தார் என்பதுதான் மீதி கதை. படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரே காமெடிதான். குடும்பமாகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம். நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.
3. Deadpool 2: சூப்பர் ஹீரோ படங்களிலேயே மிகவும் காமெடியான, கலகலப்பான சூப்பர் ஹீரோ என்றால் அது டெட்பூல்தான். இந்தப் படத்தினை தமிழ் டப்பிங் செய்வதற்காக, தமிழ் டப்பிங் செய்த டீம் அட்டகாசமாக உழைத்துள்ளார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெளியானபோதே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது.

4. Hit Man: கொரியன் படமான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் உள்ளது. படத்தின் படி, கதாநாயகன் சரியான முரடன், ஒரு காலத்தில் ரவுடியிசம் செய்து கொண்டு இருந்த அவன், திருந்தி, காமிக் கதைகள் எழுதும் நபராக வாழ்ந்து வருகின்றான். இவனது காமிக் கதைகள் யாருக்கும் பிடிக்காததால், கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகின்றான். அதன்பின்னர், தனது ரவுடி அனுபவத்தையே காமிக் கதைகளாக எழுத, அவை பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. இதனால் இவனோடு ரவுடிகளாக இருந்தவர்களுக்கு கதாநாயகன் மீது கோபம் வர, இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை. படம் அட்டகாசமான நகைச்சுவைப் படம்.
5. Kung Fu Hustle: இந்தப் படம் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ஃபேவரெட் படமாக இருக்கும். படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் அதற்கு இணையாக இருக்கும் அளவிற்கு காமெடிக் காட்சிகளும் இருக்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் சலிக்காது. அந்த அளவுக்கு இந்தப் படம் இருக்கும். படத்தின் க்ளைமேக்ஸ் ரொம்பவே டச்சிங்காக இருக்கும். தவறாமல் பாருங்கள். அமேசான் பிரைமில் உள்ளது.


Click it and Unblock the Notifications











