Lover OTT: லால் சலாமை முந்திய லவ்வர்.. ஓடிடி ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?.. செம அப்டேட் இதோ!

சென்னை: பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா நடிப்பில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக லவ்வர் திரைப்படம் வெளியானது.

தமிழ் திரைப்படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்க கூட முன் வருவதில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Lover OTT release date and platform updates are here

பொங்கலுக்கு அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களுடன் வெளியான அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. அதே போல ரஜினிகாந்த் நடித்து வெளியான லால் சலாம் படமும் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்கின்றனர்.

சொதப்பும் தமிழ் சினிமா: இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான், ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம், ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட பல படங்கள் பெரிதாக ஓடவில்லை. கோலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் மற்றும் கன்னட திரைப்படங்களும் இந்த ஆண்டு பெரிய வெற்றிப் படங்களை கொடுக்கவில்லை. தெலுங்கில் ஹனுமன் படம் மட்டுமே 300 கோடி வசூல் ஈட்டியது. மலையாள சினிமா தான் இந்த ஆண்டு மகிழ்ச்சியான திரையுலகமாக மாறியிருக்கிறது.

Lover OTT release date and platform updates are here

லால் சலாமை முந்திய லவ்வர்: மணிகண்டன் நடித்து கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ஆனால், காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான லவ்வர் படம் பாராட்டுக்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய லாபத்தை பெறவில்லை. கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியான லவ்வர் திரைப்படம் மார்ச் 9ம் தேதிக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் தான் அந்த படத்திற்கான ஓடிடி வியாபாரம் நடைபெற்று ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், லவ்வர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ் எப்போ?: வரும் மார்ச் 27ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் லவ்வர் திரைப்படம் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், குறைவான தொகைக்கே அந்த படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். இன்னமும் மிஷன் சேப்டர் 1 மற்றும் லால் சலாம் படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X