Lubber Pandhu: லப்பர் பந்து படத்தின் ஓடிடி தள்ளி வைப்பு.. திடீர் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நீண்ட காலங்களுக்கு பிறகு அட்டக்கத்தி தினேஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ள படம் லப்பர் பந்து. அட்டக்கத்தி தினேஷுடன் ஹரீஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது லப்பர் பந்து.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரஜினிகாந்தின் வேட்டையன் உள்ளிட்ட படங்களின் ரிலீசை தொடர்ந்தும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு தியேட்டர்களில் காணப்படுகிறது.

லப்பர் பந்து படம்: நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், பால சரவணன், காளிவெங்கட், சஞ்சனா, சுவாசிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது லப்பர் பந்து படம். இந்தப் படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் லப்பர் பந்தை வைத்து நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியை கதைக்களமாக கொண்டு இரு வீரர்களின் ஈகோவையும் இணைத்து வெளியாகியிருந்தது. இவர்கள் இருவருக்குள் நடக்கு கிரிக்கெட் போட்டியின்போது ஏற்படும் இந்த மோதல் எப்படி சொந்த வாழ்க்கையில் எதிரொலிக்கிறது என்பதையும் இந்தப் படம் கதைக்களமாக கொண்டிருந்தது.
வெற்றிக்கு காரணமான கதைக்களம்: இந்தப் படத்தின் வெற்றிக்கு கேரக்டர்களின் சிறப்பான தேர்வு சரியாக கைக்கொடுத்துள்ளது. இயல்பான கதைக்களத்தில் இயல்பான காட்சிகளையும் சரியான ஸ்கிரிப்டுடன் மிக்ஸ் செய்துள்ளார் தமிழரசன் பச்சமுத்து. படத்தின் கதை நகர்விற்கு பால சரவணன், ஜென்சன் திவாகர் போன்றவர்களின் கேரக்டர்களும் மிகச்சிறப்பாக உதவியுள்ளது. அதிகமான பிரமோஷன்கள் இல்லாமல் வெளியான இந்தப் படத்தின் வெற்றியை இத்தகைய விஷயங்கள் சிறப்பாக்கியுள்ளன. ஒரு படத்தின் வெற்றிக்கு கதையே பிரதானம் என்பதை மீண்டும் இந்தப் படம் உறுதி செய்துள்ளது.

ஓடிடி வெளியீடு: படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது பங்கிற்கு படத்தின் சிறப்பான பிரமோஷனுக்கு உதவியுள்ளனர். இயக்குநர்கள் வெற்றிமாறன், பா ரஞ்சித், நடிர் சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நிலையில் அதிகமான ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுக்க இதுவே காரணங்களாகியுள்ளன. படத்தின் ஓடிடி ரிலீஸ் வரும் அக்டோபர் 18ம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் மட்டுமே வரும் 18ம் தேதி இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளிப்போன ஓடிடி வெளியீடு: படம் தற்போதும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவரும் நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைப்பதாக சிம்ப்ளி சவுத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசைய்ல இந்தப் படத்தின் பாடல்களும் கவனம் பெற்றுள்ள நிலையில், படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போகிறது.


Click it and Unblock the Notifications











