OTT: ஓடியாங்க.. ஓடிடியில் வெளியானது லக்கி பாஸ்கர்.. அமரனை விட அமர்க்களமா இருக்கே என கொண்டாடுறாங்க!
சென்னை: தனுஷை வைத்து வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி அந்த படத்தை விட தரமான சம்பவத்தை துல்கர் சல்மானை வைத்து செய்துள்ளார். தீபாவளி ரேஸில் தமிழில் அமரன், பிரதர், ப்ளடி பெக்கர் உள்ளிட்ட 3 படங்கள் வெளியாகின. இதில், அமரன் படத்துக்குப் போட்டியாக தமிழ்நாட்டிலும் கல்லா கட்டிய ஒரே படம் என்றால் அது லக்கி பாஸ்கர் தான்.
அமரன் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகாத நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி ஏகப்பட்ட ட்வீட்களையும் அந்த படத்தின் காட்சிகளையும் ஷேர் செய்து வருகின்றனர்.

பலர் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிட்டேனே என்றும் புலம்பித் தவித்து வருகின்றனர். துல்கர் சல்மான் தொடர்ந்து வித்தியாசமான படங்களையும் ஃபீல் குட் படங்களையுமே கொடுத்து வருகிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மம்மூட்டி மகன்: நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் அப்பாவை போலவே நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், அப்பா அளவுக்கு வேகம் இல்லை என ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், நிறுத்தி நிதானமாக சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் துல்கர் சல்மான். ஒரு வருஷத்துக்கு 36 படம் எல்லாம் மம்மூட்டி நடித்துள்ளார். 70 வயதை கடந்த நிலையிலும், வருடத்துக்கு 5 படங்களில் நடித்து வருகிறார். கிங் ஆஃப் கோதா படம் பெரிதாக ஓடாத நிலையில், அடுத்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என குறிவைத்து அடித்துள்ளார் துல்கர் சல்மான்.
சீதா ராமம் படத்துக்குப் பிறகு: ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் உடன் இணைந்து துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படம் கடைசியாக துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு அதிகளவில் துல்கர் சல்மானின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில், அதே போல லக்கி பாஸ்கர் படமும் தற்போது தியேட்டர்களில் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
நெட்பிளிக்ஸில் லக்கி பாஸ்கர்: நயன்தாராவின் டாக்குமெண்டரி படம் தனுஷ் - நயன்தாரா பிரச்சனையை தொடர்ந்து சூடு பிடித்து இந்தியளவில் 6வது இடத்தை பிடித்துள்ளது. இன்று வெளியான லக்கி பாஸ்கர் இந்த வாரத்திலேயே நம்பர் 1 இடத்தை பிடித்து விடும் என்றும் மகாராஜா படம் எந்தளவுக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்துக்கு லாபத்தை அள்ளித் தந்ததோ அதே அளவுக்கு இந்த லக்கி பாஸ்கர் படமும் லாபத்தை ஈட்டித் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமரன் முதல் ப்ளடி பெக்கர் வரை: ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படம் தியேட்டரில் பெரிதாக ஓடாத நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் உஷாராக அந்த படத்தை இன்று வெளியிட்டால் லக்கி பாஸ்கர் உடன் கிளாஷ் ஆகும் என்பதை அறிந்துக் கொண்டு அடுத்த மாதம் டிசம்பர் 11ம் தேதி வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











