Lust Stories 2: கஜோல், தமன்னா, மிருணாள் தாகூரா.. கொல குத்தாக இருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டீசர்!
மும்பை: மின்சார கனவு கஜோல், ஜெயிலர் தமன்னா மற்றும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி டீசர் தற்போது வெளியாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
லஸ்ட் ஸ்டோரீஸ் (காமக் கதைகள்) முதல் சீசனே இந்திய ரசிகர்களை மிரட்டி எடுத்தது. ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, பூமி பெட்னகர் என பல டாப் நடிகைகள் ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்று நடித்தனர்.

இந்நிலையில், 4 பிரபல இயக்குநர்கள் இயக்கத்தில் 9 முன்னணி நடிகர்கள் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜியின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
அதிர வைத்த லஸ்ட் ஸ்டோரி: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு சென்றாலே கிலோ கணக்கில் காமக் கதைகளும் நிர்வாணப் படங்களும் கொட்டிக் கிடக்கின்றன. மேலும், இந்திய ரசிகர்களை கவரும் வகையில் பாலிவுட் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை செம ஹாட்டாக நடிக்க வைத்து வெப்சீரிஸ்களையும், படங்களையும் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் பாகத்தில் கியாரா அத்வானி வைப்ரேட்டரை வைத்து பயன்படுத்திய காட்சிகள் எல்லாம் இடம்பெற்று இந்திய ரசிகர்களை செம ஷாக்கில் ஆழ்த்திய நிலையில், அதன் 2வது சீசன் அடுத்த செட் இயக்குநர்களுடன் அடுத்த செட் முன்னணி நடிகைகளுடன் தற்போது உருவாகி ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது.
தமன்னா தாராளம்: விஜய் வர்மாவுடன் நடிகை தமன்னா காதலில் விழுந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த வெப்சீரிஸில் விஜய் வர்மா உடன் படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டி நடித்துள்ளார் தமன்னா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள தமன்னாவா இப்படி லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் எரோடிக்காவாக நடித்துள்ளார் என ரசிகர்கள் ஷாக் ஆகி #TamannaahBhatia ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து அவரது ஹாட்டான காட்சிகளை ஷேர் செய்து வருகின்றனர்.
காமக் கதையில் கஜோல்: மின்சாரக் கண்ணா படத்தில் கன்னியாஸ்திரியாக போகிறேன் என அரவிந்த் சாமிக்கு அல்வா கொடுத்து விட்டு பிரபுதேவாவுடன் காதலில் விழும் நடிகை கஜோல் என்ன திடீரென இந்த வயதில் செம ஹாட்டாக போட்டோக்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் போட்டு வருகிறாரே என்ன விஷயம் என குழம்பித் தவித்த ரசிகர்களுக்கு தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் அவர் நடித்திருப்பது மேலும், ஷாக்கை கொடுத்துள்ளது.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து ரொம்பவே ஒதுங்கி இருந்த கஜோல் சில படங்களில் நடித்தாலும் ஹோம்லியாகவே நடித்து வந்தார். இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸில் எப்படி நடித்திருக்கப் போகிறாரோ என்கிற ஹைப்பே ரசிகர்களை அந்த ஆந்தாலஜியை பார்க்க வைத்து விடும்.
நம்ம சீதாவும் இருக்காங்க: சீதாராமம் படத்தில் சீதாவாக நடித்த மிருணாள் தாகூருக்கு பாலிவுட்டில் தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்கள் குவிய அவரும் இறங்கி நடித்து வருகிறார்.
இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப்சீரிஸில் அவருக்கும் தமன்னாவுக்கும் இடையே தான் பெரிய போட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்துக்கு முன்னாடி டெஸ்ட் டிரைவா?: நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டீசரில் பாட்டி ஒருவர் புதுசா வண்டி வாங்கும் போது டெஸ்ட் டிரைவ் பார்த்துட்டு வாங்குறதை போல திருமணத்துக்கு முன்னாடியும் டெஸ்ட் டிரைவ் பண்ணனும்னு சொல்லும் காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
வரும் ஜூன் 29ம் தேதி லஸ்ட் ஸ்டோரீஸ் 2 நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இயக்குநர் பால்கி, அமித் ரவிந்திரநாத் சர்மா, கொங்கனா சென் மற்றும் சுஜோய் கோஷ் இந்த 4 கதைகளை தனித்தனியாக இயக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











