OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: திரையரங்குகளில் சென்று படம் பார்க்க ஒரு கூட்டம் விரும்பினாலும், வீட்டிலேயே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, குடும்பத்துடன் இரவு நேரங்களில் படம் பார்க்க சிலர் விரும்புகின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்காக ஜியோ சினிமா, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் , சோனி லிவ் மற்றும் ஆஹா போன்ற தளங்கள் வாராவாரம் போட்டி போட்டுக்கொண்டு படத்தை வெளியிட்டு வருகின்றன.

கடந்த வாரம் அஸ்வின்ஸ், பாயும் ஒளி நீ எனக்கு போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் மாமன்னன், ரெஜினா, கால்கூட், கேப்டன் பால் போன்ற திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாக உள்ளன.

Maamannan, Rejina and Kaalkoot New releases on ott platforms this week

சிங்க்: முதல் நீ முடிவும் நீ என்ற படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கிஷன் தாஸ். இவர் நடிப்பில் ஹாரர் ஜானர் படமான சிங்க் படத்தை விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் மோனிகா, சௌந்தர்யா பாலா நந்தக்குமார், நவீன் ஜார்ஜ் தாமஸ், நந்தினி வினோத், சுப்ரியா ராவ், கலையரசி, ஷீலா விஸ்வநாத், கார்த்திக் கிருஷ்ணா, ஹரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு அபிஜித் ராமசுவாமி இசையமைத்துள்ளார், ஷிவ்ராம்.பி.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மாமன்னன்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்,வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாமன்னன் திரைப்படம் ஜூலை 27ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. வடிவேலுவின் அட்டகாசமான நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் பாராட்டினார்கள்.

Maamannan, Rejina and Kaalkoot New releases on ott platforms this week

ரெஜினா: மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவான ரெஜினா படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழியில் இத்திரைப்படம் ஜூன் 23ந் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படம் நாளை (ஜூலை 25) அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

கால்கூட் வெப் தொடர்: நடிகர் விஜய் வர்மா நடிப்பில் இயக்குநர் அருணாப் குமார் இயக்கி உள்ள வெப் தொடர் தான் கால்கூட். இத்தொடரை அஜித் அந்தரே, அம்ரித்பால் சிங் பந்த்ரா மற்றும் ஆனந்த் திவாரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்தொடர், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளிலும் ஜூலை 27ந் தேதி முதல் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

Maamannan, Rejina and Kaalkoot New releases on ott platforms this week

தி விட்சர் சீசன் 3: ஹென்றி கேவில், ஃப்ரேயா ஆலன், அன்யா சலோத்ரா, ராபி அமெல், மெங்கர் ஜாங், ஹக் ஸ்கின்னர், கிறிஸ்டெல் எல்வின் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தொடர் தி விட்சர் சீசன் 3. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 27ந் தேதி முதல் கண்டு மகிழுங்கள்

கேப்டன் ஃபால் : கிறிஸ்டோபர் மெலோனி, லெஸ்லி-ஆன் பிராண்ட் மற்றும் அந்தோனி கேரிகன் ஆகியோர் நடித்த ஆங்கில வலைத் தொடர்தான் கேப்டன் ஃபால். இந்த அனிமேஷன் வலைத் தொடரை ஜூலை 28ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X