ஓடிடியில் ரிலீஸாகும் சிம்புவின் ’மாநாடு’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. என்னைக்குன்னு பாருங்க!

சென்னை: சிம்பு நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பெரும் இழுபறிக்கு பின்னர் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. வார நாட்களில் ரிலீஸ் செய்யப்பட்ட போதும் மாநாடு படம் வசூலை வாரி குவித்தது.

மாநாடு 2 வரும்

மாநாடு 2 வரும்

இதனால் படக்குழு செம ஹேப்பியானது. படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் செய்தது. டைம் லூப்பை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'மாநாடு 2' எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ்

டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ்

இந்த நிலையில், 'மாநாடு' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் வெளியீட்டுத் தேதி தற்போது வெளியாகி உள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேட்டிலைட் உரிமம்..

சேட்டிலைட் உரிமம்..

தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு 4 வாரங்கள் நிறைவடைந்த பிறகே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்பதால் ஒரு மாதம் கழித்து ஓடிடி தளத்தில் படத்தை ரிலீஸ் செய்கிறது படக்குழு. இதனிடையே சேட்டிலைட் உரிமத்தை ஸ்டார் விஜய்யும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil
படங்கள் தியேட்டர் ரிலீஸ்

படங்கள் தியேட்டர் ரிலீஸ்

முதலில் மாநாடு படத்தை வாங்க மறுத்த விஜய் டிவி, தற்போது அதிக விலை கொடுத்து சேடிலைட் உரிமத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் டிசம்பர் 24ஆம் தேதி விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள 'ராக்கி', இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்துள்ள 'ரைட்டர்', அதர்வாவின் 'குறுதி ஆட்டம்', சத்யராஜின் 'தீர்ப்புகள் விற்கப்படும்' உள்ளிட்டப் புதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X