Maaveeran: ஜெயிலருக்கு டஃப் கொடுக்கும் மாவீரன்... OTT ரிலீஸ் தேதியை உறுதி செய்த சிவகார்த்திகேயன்

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 Maaveeran: Maaveeran will be streaming from Aug 11 on Amazon Prime

பிரின்ஸ் பட தோல்வியில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் சூப்பர் கம்பேக்காக அமைந்தது.

இந்நிலையில், மாவீரன் ஓடிடி ரிலீஸ் தேதி மூலம் ரஜினியின் ஜெயிலருக்கு செக் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மாவீரன் ஓடிடி ரிலீஸ் தேதி: சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாவீரன் திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது. மடோன் அஷ்வின் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன் கேரியரில் மாவீரன் வித்தியாசமான படமாக அமைந்தது.

கார்ட்டூனிஸ்ட் சத்யா கேரக்டரில் எதற்கெடுத்தாலும் அஞ்சி நடுங்கும் சிவகார்த்திகேயன், திடீரென ஆக்‌ஷனில் அதிரடி காட்டுவதும், வில்லன்களை புரட்டி எடுப்பதுமாக மாஸ் காட்டியிருந்தார். சிவகார்த்திகேயனை மாவீரனாக மாற வைப்பதற்காக, பின்னணியில் இருந்து முகம் காட்டாமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி. அவரின் இந்த துணிச்சலான முடிவை ரசிகர்கள் ரொம்பவே என்ஜாய் செய்திருந்தனர்.

ஆக்‌ஷன், காமெடி, சென்டிமெண்ட், புதிய கதைக்களம் என மாவீரன் எல்லாவிதத்திலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனால் முதல் நாளில் இருந்தே மாவீரன் படத்திற்கு தரமான ஓபனிங் கிடைக்க, வசூலிலும் மாஸ் காட்டியது. அதன்படி மாவீரன் இதுவரை 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இப்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது.

இருப்பினும் வரும் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் வெளியாகவுள்ளதால், மாவீரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துவிட்டது. அதன்படி, வரும் 11ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் மாவீரன் படத்தை பார்க்கலாம். முதலில் இதே ஆகஸ்ட் 11ம் தேதியில் தான் திரையரங்குகளில் வெளியாகவிருந்தது மாவீரன் திரைப்படம். ஆனால், ரஜினியின் ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது.

இதனால், ரஜினிக்காக மாவீரன் ரிலீஸ் தேதியை ஜூலை 14ம் தேதிக்கு மாற்றினார் சிவகார்த்திகேயன். இதனை சிவகார்த்திகேயன் மனதிலேயே வைத்திருந்தாரோ என்னவோ, இப்போது ஜெயிலருக்கு போட்டியாக மாவீரனை ஓடிடியில் களமிறக்குகிறாரா என பேச்சு எழுந்துள்ளது. அதாவது 10ம் தேதி ரிலீஸாகும் ஜெயிலர் படத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவார்கள். அப்போது தியேட்டரில் டிக்கெட்டுகள் இல்லையென்றால் ஓடிடியில் மாவீரனுக்கு நல்ல ரீச் கிடைக்கும் என சிவகார்த்திகேயன் பிளான் செய்துள்ளாராம்.

அதேபோல், தொடர்ச்சியாக விடுமுறையும் இருப்பதால், ஓடிடி ரசிகர்களும் மாவீரனுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். இதனால் சரியான நேரம் பார்த்து மாவீரனை வரும் 11ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்கிறார் சிவகார்த்திகேயன். திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் மாவீரன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X