Maaveeran OTT: ஓடிடியில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கடந்த ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.

சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களை பெற்ற மாவீரன் படத்தின் வசூல் 90 கோடி ரூபாய்களை எட்டியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பி தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Maaveeran OTT Release: Sivakarthikeyan Starrer ‘Maaveeran’ streaming on Amazon Prime OTT Platform

இதனிடையே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் மாவீரன் தற்போது ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான மாவீரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து தன்னுடைய ஹீரோ இமேஜை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். இவரது டாக்டர், டான் படங்கள் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், அடுத்ததாக சிவா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் படம் சொதப்பியது. இதனால் சிவகார்த்திகேயனின் ஹாட்ரிக் வெற்றி கனவு தகர்ந்தது. ஆனாலும் கடந்த ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான மாவீரன் படம் அவருக்கு மீண்டும் கைக்கொடுத்துள்ளது.

தன்னுடைய படங்களையும் இயக்குநர்களையும் சிறப்பாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், மண்டேலா என்ற படத்தில் யோகிபாபுவை லீட் கேரக்டரில் நடிக்க வைத்து வெற்றி பெற வைத்த மடோன் அஸ்வினை அவர் தனது படத்தின் இயக்குநராக தேர்ந்தெடுத்திருந்தார். முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் மாவீரன் படத்தை இயக்கியிருந்தார் மடோன் அஸ்வின். அதற்கு சிவகார்த்திகேயனின் பாடி லாங்குவேஜூம் சிறப்பாக ஒத்துழைத்தது.

பக்கத்து வீட்டு பையன் போன்ற லுக்குடன் ரசிகர்களை கவர்ந்துவரும் சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் படத்தில் அவர் ஏற்றிருந்த பயந்தாங்கொள்ளி கேரக்டர் சிறப்பாகவே வொர்க் அவுட் ஆனது. பிரச்சினைகளில் இருந்து விலகுவதிலேயே குறியாக இருக்கும் ஒரு இளைஞனுக்கு கிடைக்கும் அபூர்வ சக்தி அவருடைய வாழ்க்கையை மாற்றும் கதைக்களத்தில் இந்தப் படம் சிறப்பாகவே அமைந்தது. படத்தில் நாயகியாக நடித்திருந்த அதிதி ஷங்கருக்கு அதிகமான வேலை இல்லை என்ற போதிலும் தன்னுடைய கேரக்டரை அவர் சிறப்பாகவே செய்திருந்தார்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் யோகிபாபு. அவருடைய காமெடி இந்தப் படத்தில் சிறப்பானவகையில் அமைந்தது. ஒவ்வொரு முறையும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் செய்யும் காமெடி காட்சிகள் படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. மேலும் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு இணைந்திருந்த சரிதா, மற்றும் வில்லனாக நடித்திருந்த மிஷ்கின் உள்ளிட்டவர்களும் சிறப்பு சேர்த்திருந்தனர். இந்தப் படம் தற்போது சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் 90 கோடிகளை எட்டியுள்ளது.

Maaveeran OTT Release: Sivakarthikeyan Starrer ‘Maaveeran’ streaming on Amazon Prime OTT Platform

இந்நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மாவீரன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து உற்சாகமான ரசிகர்களுக்கு படத்தை மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பத்தை இந்த ஓடிடி வெளியீடு தற்போது ஏற்படுத்தி தந்துள்ளது. காலையிலேயே ரசிகர்கள், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் விரைவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓடிடியிலும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் காஷ்மீர் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும், அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதையொட்டி தன்னுடைய ஹேர்ஸ்டைலை வெளிப்படுத்தாமல் சமீபகால நிகழ்வுகளில் அவர் குல்லா அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X