For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விவாகரத்தை இப்படியும் பண்ணலாம்.. மாதவனின் நடிப்பில் வெளியான Decoupled வெப்சீரிஸ் எப்படி இருக்கு?

  |

  சென்னை: மானு ஜோசப் திரைக்கதையில் இயக்குநர் ஹர்திக் மேத்தா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவாகி உள்ள Decoupled வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

  கடந்த டிசம்பர் 17ம் தேதி வெளியான முதல் சீசன் ஏகப்பட்ட கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளன.

  விமர்சகர்கள் கழுவி ஊற்றி காயப்போட்டுள்ள இந்த வெப்சீரிஸ் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி என்ன தான் இந்த வெப்சீரிஸ் இருக்கு என இங்கே பார்ப்போம்.

  பெரிய ரைட்டராக மாதவன்

  பெரிய ரைட்டராக மாதவன்

  நாவல்களை எழுதும் நம்பர் 2 புத்தக எழுத்தாளராக நடிகர் மாதவன் ஆர்யா அய்யர் எனும் கதாபாத்திரத்தில் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸ் அவருடைய புத்தகத்தை படமாக்கப் போவதாகவே இந்த வெப்சீரிஸ் கதை நகர்கிறது. எந்த விஷயத்தையும் பட்டென பேசிவிடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாதவன் வாயை தெரிந்தாலே பிரச்சனை வெடித்து விடும். அதன் காரணமாகவே அவருக்கும் அவரது மனைவிக்கும் விவகாரத்து நடைபெற உள்ளது.

  மனைவியாக சுர்வின் சாவ்லா

  மனைவியாக சுர்வின் சாவ்லா

  ஹேட் ஸ்டோரி, பார்ச்சட், ஸேக்ரட் கேம்ஸ் என பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 37வயது ஹாட்டான நடிகை சுர்வின் சாவ்லா ஆர்யா அய்யரின் மனைவி ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமண வாழ்க்கை போரடித்து விட்டதாக நினைக்கும் அவர் கணவரை விவகாரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறார்.

  12 வயதில் மகள்

  12 வயதில் மகள்

  சுமார் 10 முதல் 12 வயதில் பார்க்கவே பெரிய பெண்ணாக இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அந்த மகளின் மனம் கோணாத படி இருவரும் விவாகரத்து செய்ய வேண்டும் என்பது தான் இந்த வெப் தொடரின் கதை. அதற்காக இருவரும் போராடுவதும் மகளுக்கு புரிய வைக்க முயல்வதுமாக இந்த கதை நகர்கிறது.

  பிரிவு விழா

  பிரிவு விழா

  வெட்டிங் போல ஷெட்டிங் என்கிற வார்த்தையுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதை கோவாவில் ஒரு விழாவாக நடத்தி மகளுக்கு தாங்கள் இருவரும் சந்தோஷமாகவே பிரிகிறோம் என்பதை புரிய வைக்க முயல்கின்றனர். அதற்காக அக்னி சாட்சி எல்லாம் வைத்து திருமண மோதிரத்தை இருவரும் கழட்டி தூக்கி வீசும் காட்சிகளும் மகள் வருத்தப்படும் காட்சிகளும் நிறைந்துள்ளன.

  ஏ ஜோக்ஸ்

  ஏ ஜோக்ஸ்

  கதையின் பலம் என நினைத்து ஏகப்பட்ட ஏ ஜோக்ஸ்களை வெப் தொடர் முழுக்க பரவ விட்டுள்ளனர். மாதவன் பேசும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சிரிக்கவும் விமர்சகர்கள் மற்றும் பெண்ணிய போராளிகளை கடுப்பாக்கியும் உள்ளன. சந்தானம் படத்தில் வருவது போல பெண்களை கேவலப்படுத்தும் பழமை வாய்ந்த ஜோக்குகள் தான் வெப் தொடர் முழுக்க நிறைந்துள்ளன. அதன் காரணமாகவே இதற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவும் பெருகி வருகிறது.

  மாதவன் மட்டுமே

  மாதவன் மட்டுமே

  8 எபிசொடுகளை கொண்ட இந்த வெப் தொடரில் ஆரம்பத்தில் 14 வயது பையன் கை எப்போதுமே அந்த இடத்தில் பிசியாக இருக்கும் என்பதால் கை கொடுக்க மாட்டேன் என்று முதல் எபிசோடு ஆரம்பிப்பதில் இருந்து, பெண்களின் ஆர்ம் பிட் ஷேவ் செய்திருந்தால் அலர்ஜி என வெறுத்து ஓடும் காட்சி, சேத்தன் பகத்தின் புத்தகம் முதல் ரேக்கில் உள்ள நிலையில், அதனை எடுத்து இரண்டாவது ரேக்கில் வைத்து விட்டு தன்னுடைய புத்தகத்தை முதல் இடத்தில் வைப்பது, சேத்தன் பகத்துடனே ஒவ்வொரு இடங்களிலும் வம்பு செய்வது, மாமனாரிடம் காண்டம் போட்டுக் கொண்டு மாமியாரிடம் உறவு கொள்ள சொல்வது என மாதவன் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஸ்கோர் செய்கிறார்.

  தமிழ் டப்பிங் இருக்கு

  தமிழ் டப்பிங் இருக்கு

  நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள இந்த Decoupled வெப் சீரிஸ் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப் செய்துள்ளனர். ஆனால், ஆங்கிலத்தில் டப்பிங் பேசியுள்ள மாதவன் தமிழில் டப்பிங் பேசவில்லை. மாதவன் வாய்ஸ்க்கு பதிலாக வரும் வாய்ஸ் ஆங்கில வெர்ஷனில் ஒர்க்கவுட் ஆன காமெடிகளையும் கெடுத்து விடுகின்றன. தமிழ் டப்பிங்கில் மட்டுமே பார்ப்பேன் என்பவர்கள் மட்டும் தமிழ் டப்பிங்கில் இந்த வெப் தொடரை பார்க்கலாம். மற்றவர்கள் ஆங்கிலத்தில் பார்ப்பது நல்லது.

  அது தான் திருமணமே

  மாதவன் மற்றும் சுர்வின் சாவ்லா விவகாரத்து செய்து பிரிந்து விட்டாலும் ஒரே வீட்டிலேயே மகளின் எதிர்காலத்திற்காக சேர்ந்து வாழ்வோம் என சுர்வின் சாவ்லாவின் பெற்றோர் இடத்தில் சொல்லும் காட்சியில் அது தான் திருமண வாழ்க்கையே என அவருடைய அம்மா சொல்வது ஹைலைட். இதைத்தான் ராத்திரி பூரா உட்கார்ந்து ஒட்டிக் கிட்டு இருந்தீங்களா என தூள் பாட்டி போல தூக்கிப் போட்டு உடைத்து விடுவார்.

  English summary
  Actor Madhavan and Surveen Chawla starrer Decoupled Webseries running in Netflix at Trending top 10. This adult content webseries gets mixed reviews.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X