மெட்ராஸ் மேட்னி ஓடிடி ரிலீஸ்.. காளி வெங்கட் மிரட்டலாக நடித்த படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
சென்னை: கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷிணி, சத்யராஜ் நடித்த திரைப்படம்ம் 'மெட்ராஸ் மேட்னி'. இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் மேட்னி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. கே.சி. பாலாசாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்தில் காளிவெங்கட், சத்யராஜுடன், சாம்ஸ், விஸ்வா, ஷெல்லி கிஷோர், கீதா கைலாசம், மரியம் ஜார்ஜ், ராமர் ஆகியோர் நடித்துள்ளனர். துப்பறியும் நாவல் எழுதும் எழுத்தாளரான சத்யராஜுக்கு, ஒரு பெண் மூலம் சாதாரண மக்கள் பற்றி எழுதுங்கள் அதுதான் பெரிய ரீச் கிடைக்கும் என ஒரு அறிவுரை வருகிறது. அதை ஏற்று கொண்ட சத்யராஜ், அது பற்றி கதையை தெரிந்து கொள்வதற்காக ஒரு பாருக்கு செல்கிறார். அங்கே காளி வெங்கட்டை சந்தித்து அவர் கதையை கேட்கிறார்.
ஆட்டேடோ ஓட்டுநரான காளி வெங்கட், தனக்கு கிடைக்கும் சிறிய வருமனத்தை வைத்து தன் மகன், மகளை எப்படியாவது பெரிய ஆட்கள் ஆக வேண்டும் போராடுகிறார்.

மெட்ராஸ் மேட்னி : காளி வெங்கட்டின் மகள் ரோஷினி ஒரு நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாயாது நம் பக்கத்தில் கொடுக்க வேண்டும் என காளி வெங்கட் நினைக்கிறார். அதே நேரத்தில் மகன் இஞ்ஜினியர் படிக்க வைக்கவும் பணம் வேண்டும் என வாழ்க்கையை நடத்த பல போராட்டமே நடத்துகிறார். இதெல்லாம் அவரை எங்கு கொண்டு சென்றது. குழந்தைகளுக்காக வாழ்க்கையை வாழ்ந்து வந்த காளி வெங்கட், ஏன் குடிக்க பாருக்கு வந்தார் என்பது தான் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் கதை. அப்பா பாசத்தை சொல்லும் படம் என்றும், தவமாய் தவமிருந்து படம் 2 என்றும் படத்தை பார்த்த பலர் இணையத்தில் இப்படத்தை பாராட்டினார்கள்.
ஓடிடி ரிலீஸ் தேதி: தற்போது, இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இத்திரைப்படம், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என வெளியாக உள்ளது. தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டிய நிலையில், ஓடிடியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











