மனசே புண்ணாப்போச்சு.. ஓடிடியில் நீக்கப்பட்ட மதுர வீரன் தானே பாடல்.. விக்ரம் ரசிகர்கள் புலம்பல்!
சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் 2ம் பாகம் திரைப்படம் திரையரங்குகளில் ஓரளவுக்கு வசூல் ஈட்டிய நிலையில், அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஆனால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த "மதுரை வீரன் தானே" பாடல் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் என விஜய் சேதுபதியை வைத்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் கடைசியாக நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.

அந்த படத்தை பார்த்து மிரண்டு போன சீயான் விக்ரம் உடனடியாக அருண்குமார் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார். வீர தீர சூரன் 2ம் பாகத்தை உருவாக்கி முதலில் வெளியிட்டுள்ளனர். அந்த படம் திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ஓடிடி ரசிகர்களையும் இந்த வாரம் வெளியாகி தியேட்டருக்கு கூட செல்ல விடாமல் செய்துள்ளது.
வடிவேலு படம் மட்டுமே: இந்த வாரம் திரையரங்குகளில் சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க செய்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று வெளியான சிவாவின் சுமோ திரைப்படம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. பொதுமக்கள் இந்த இரண்டு படங்களையும் தியேட்டருக்கு சென்று போய் பார்ப்பதில் பெரிய ஈடுபாடுகளை செலுத்தவில்லை என்பது பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை பார்த்தாலே தெரிகிறது என்கின்றனர். கேங்கர்ஸ் படத்துக்கு மட்டுமே ஓரளவுக்கு மக்கள் கூட்டம் திரையரங்குகளில் நோக்கி படையெடுத்து வருகிறது.
வீட்டிலேயே வீர தீர சூரன்: மக்கள் இந்த வாரம் வீட்டில் இருந்தபடியே வீர தீர சூரன் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், எம்புரான் உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ள நிலையில், இந்த வாரம் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் செல்வது குறைவாக தான் இருக்கும் என்கின்றனர்.
விக்ரம் மிரட்டிட்டாரு: பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் தியேட்டரில் பெரிதாக ஓடாத நிலையில், அதன் ஓடிடி ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்ட நிலையில் பல மாதங்கள் கழித்து வெளியானது. அந்த படத்தை பார்த்த ஓடிடி ரசிகர்கள் சீயான் விக்ரமின் கடுமையான உழைப்பை கொண்டாடினர். அதேபோல இந்த ஆண்டும் திரையரங்குகளில் வீர தீர சூரன் திரைப்படத்தை மிஸ் செய்த ரசிகர்கள் ஓடிடியில் பார்த்துவிட்டு விக்ரம் மிரட்டிட்டாரு என்றும் அதிலும் அந்த ஃபிளாஷ்பேக் போர்ஷன் எல்லாம் வெறித்தனம் என கொண்டாடி வருகின்றனர்.
மதுர வீரன் தானே பாடல் நீக்கம்: திரையரங்குகளுக்கு சென்று வீர தீர சூரன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிளைமாக்ஸ் கட்சியில் நடைபெறும் சண்டையின் போது வெளியான "மதுர வீரன் தானே" தூள் பாடலை கேட்டு கூஸ்பம்ப்ஸ் அடைந்தனர். ஆனால், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்த்த ரசிகர்களுக்கு அந்த அனுபவம் கிடைக்காமல் போய்விட்டது. தியேட்டரில் அந்த பாடல் இடம்பெற்ற போதே கலவையான விமர்சனங்கள் குவிந்தன. இந்நிலையில், ஓடிடியில் அந்த பாடலை தூக்கிவிட்டு வீரா தீரா சூரா எனும் பிஜிஎம்மை போட்டு ஓட்டியுள்ளனர். படம் முழுக்கவே ஆக்ஷன் காட்சிகளாகவும் ஒரே இரவில் நடைபெறும் கதை என்பதால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் படம் படு ஸ்பீடாக செல்கிறது.
குட் பேட் அக்லி போல: இந்த படம் சியான் விக்ரமுக்கு குட் பேட் அக்லி படத்தை போல மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், படம் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கல் என ஏகப்பட்ட காரணங்களால் பெரிதாக மக்கள் மத்தியில் கொண்டாடப்படவில்லை. அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications