மகாராஜா படத்துக்கு திடீர் தடை கோரி நெட்டிசன்கள் போராட்டம்.. ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு!
சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்துக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியாகவுள்ள மகாராஜா படத்தில் இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் உள்ளன. இந்நிலையில், மகாராஜா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சோசியல் மீடியாவில் சர்ச்சை வெடித்துள்ளது.
ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால், தமிழில் விஜய் சேதுபதி நடித்து நாளை வெளியாக உள்ள மகாராஜா படத்துக்கு தடை கோரி இந்தப் போராட்டம் நடைபெறவில்லை. அமீர்கான் மகன் நடிப்பில் உருவாகியுள்ள மகாராஜ் எனும் ஓடிடி படத்துக்கு தடை கோரி தான் பாலிவுட்டில் பெரும் போராட்டம் தற்போது வெடித்துள்ளது.

ஏற்கனவே அமீர்கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அந்த படம் சொதப்பிய நிலையில் படம் படுத்த தோல்வியை சந்தித்தது.
ஹீரோவான அமீர்கான் மகன்: பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான் ஹீரோவாக நடித்துள்ள மகாராஜ் திரைப்படம் ஜூன் 14-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அமீர்கானின் முன்னாள் மனைவி ரீனா தாத்தாவுக்கு மகனாக பிறந்தவர் தான் ஜுனாயத் கான். பாலிவுட்டில் தற்போது நடிகராக வலம் வருகிறார். அவர் நடித்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
மகாராஜா படத்தை தடை செய்யணும்?: ஜுனாயத் கான் நடித்துள்ள மகாராஜ் திரைப்படம் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்து மத குருக்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வடமாநிலத்தில் இந்து அமைப்பினர் அந்த படத்துக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

உண்மை சம்பவம்: 1862ம் ஆண்டு நடைபெற்ற மகாராஜா அவதூறு வழக்கு தான் இந்த படத்தின் கதை. ஜாதுநாத்ஜி பிரிஜ்ரத்தன்ஜி மகாராஜ் எனும் துறவியின் லீலைகளை கர்சாந்தாஸ் முல்ஜி எனும் பத்திரிகையாளர் அம்பலப்படுத்திய கதை தான் இந்த மகாராஜ் படத்தின் கதை எனக் கூறுகின்றனர். பிகே படத்தில் அப்பா அமீர்கான் இந்து கடவுள்களை அவமதித்தார் என்றும் தற்போது அவர் மகன் அதே பணியை கையிலெடுத்துள்ளார் என்றும் இஸ்லாமிய துறவிகள் குறித்து இவர்கள் படமெடுக்க வேண்டியது தானே? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நயன்தாராவின் அன்னபூரணி: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார் நடித்த அன்னபூரணி படத்திலும் இந்துக்களை அவமதித்து இருந்தனர் என்றும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நெட்பிளிக்ஸில் இருந்து அந்த படம் ஒரேயடியாய் நீக்கப்பட்டது. அதைபோலவே இந்த மகாராஜ் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் போராடி வருகின்றனர். இதற்கு இடையே விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் சிக்கித் தவிக்கிறது. ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள மகாராஜ் படத்தின் டிரெய்லர் கூட வெளியாகாத நிலையில், படத்தின் போஸ்டரே சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அமீர்கானின் மகன் படம் தடைகளை தாண்டி வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications











