மகேந்திரனின் அதிரடி ஆக்‌ஷனை ஓடிடியில் காண ரெடியா?.. சன் நெக்ஸ்ட்டில் வெளியான ‘நீலகண்டா’

சென்னை: தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகத் தடம் பதித்த மகேந்திரன், தனது சிறு வயதிலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து "மாஸ்டர் மகேந்திரன்" எனப் புகழ்பெற்றார். குழந்தை நட்சத்திரப் பாத்திரங்களில் இருந்து நாயகனாகப் பரிணமித்துள்ள இவர், கடந்த சில ஆண்டுகளாகக் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் வெளியாகி அதிகம் கவனம் ஈர்த்த நடிகர் விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படத்தில் இளம் வயது பவானி எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து, மகேந்திரன் பெரும் புகழைப் பெற்றார். அப்படத்திற்குப் பிறகு நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, திரைப்படம், இணையத் தொடர்கள் எனத் தனது திரைப்பயணத்தை மாற்றியமைத்துள்ளார்.

சமீப காலமாக, மகேந்திரன் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற பிற தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் தீவிரமாக நடித்து, பன்முக நடிகராக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் நடிப்பில் உருவான "நீலகண்டா" திரைப்படம் தற்போது வெளியாகி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது.

"நீலகண்டா" திரைப்படத்தை எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசுலு மற்றும் வேணு கோபால் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பாளராகவும், ஸ்ரவன் ஜி குமார் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் மகேந்திரனுடன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு மற்றும் சிவகார்த்திக் தன்டா உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

"நீலகண்டா" திரைப்படம் கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட ஒரு சாதாரண தையல்காரனை மையமாகக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் கதையாகும். அவனது வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத பிரச்சனைகளையும், அவனது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் எதிரியை அவன் எப்படித் துணிச்சலுடன் எதிர்கொள்கிறான் என்பதையும் இந்தத் திரைப்படம் விரிவாகப் பேசுகிறது.

நடிகர் மகேந்திரன் நடித்துள்ள இந்தப் புதிய திரைப்படம் சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஓடிடி தளத்தில் இன்று நேரடியாக வெளியாகியுள்ளது. இது, நீண்ட நாட்களாக அவரது படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X