Manjummel boys: கொண்டாட தயாராகும் ரசிகர்கள்.. மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ் எப்ப தெரியுமா?

சென்னை: சிதம்பரம் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவில் வெளியான இந்தப் படத்திற்கு கிடைத்த அதிகப்படியான வரவேற்பை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட சர்வதேச அளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போதுவரை இந்தப் படம் திரையரங்குகளில் 235 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான குணா குகையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. மேலும் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு பாடலும் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ள சூழலில் 60 சதவிகிதம் தமிழில் இந்தப் படம் இருந்ததால் டப்பிங் செய்யாமல் அப்படியே வெளியானது. இந்தப் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், சந்தானபாரதி உள்ளிட்டவர்கள் படத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Malayalam blockbuster Manjummel Boys is set to premiere digitally on Disney Hotstar on May 3rd

மஞ்சும்மல் பாய்ஸ் படம்: கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியானது மஞ்சும்மல் பாய்ஸ் படம். இந்தப் படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கியிருந்தார். படத்தில் ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு நண்பர்கள் செல்லும் இடத்தில் குணா குகையில் சிக்கும் நண்பரை சக நண்பர்கள் போராடி மீட்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. முன்னதாக 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் லீட் கேரக்டரில் நடித்து வெளியான குணா படத்தின் கண்மணி அன்போடு பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றது.

பாராட்டிய உலகநாயகன்: மேலும் குணா படத்தால் பிரபலமான குணா குகை, தற்போது இந்தப் படத்தால் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது. படத்தை பார்த்த கமல்ஹாசன், சந்தானபாரதி உள்ளிட்ட குணா டீம், பாராட்டித் தள்ளியதுடன், தங்களது குணா சூட்டிங் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர். சர்வைவல் திரில்லராக வெளியான இந்தப் படம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் அதன்மூலம் சிறப்பான வசூலையும் பெற்றது. சர்வதேச அளவில் 235 கோடி ரூபாய்களை இந்தப் படம் வசூலித்துள்ளது. மலையாள சினிமாவிலேயே மிக அதிவிரைவில் 200 கோடி ரூபாய்களை ஈட்டிய படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் படம் பெற்றுள்ளது.

மே 3ம் தேதி ஓடிடியில் ரிலீஸ்: கடந்த ஏப்ரல் 5ம் தேதியே இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவித்தபடி படம் வெளியாகவில்லை. 20 கோடிக்கு ஓடிடிக்கு விற்பனை செய்ய தயாரிப்புத்தரப்பு திட்டமிட்டதால் படத்தை எந்த நிறுவனமும் வாங்க முன்வரவில்லை என்று கூறப்பட்டது. தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் படம் வரும் மே மாதம் 3ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிஜிட்டல் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களும் ஓடிடி ரிலீசுக்காகவும் காத்திருக்கின்றனர். இன்னும் சில தினங்களில் இந்தப் படம் ஓடிடியில் வெளியகவுள்ள சூழலில், அதிலும் அதிகமான வியூஸ்களை பெற்று சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம். கண்மணி அன்போடு பாடல் படத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X