40 வருட கொலை வழக்கு... இரவை மிரட்டும் விறுவிறுப்பான த்ரில்லர் ஸ்டோரி

கேரளா: ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், ஹாரர், அட்வென்ச்சர் என பல ஜானர்கள் இருந்தாலும், த்ரில்லர் படங்களை பார்ப்பதற்கென்ற தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். த்ரில்லர் ஜானரில் போலீஸ் ஸ்டோரி பற்றி சொல்லவா வேண்டும், விறுவிறுப்பான சண்டை காட்சிகளும், இரவை மிரட்டும் வில்லன்களின் புத்திசாலித்தனம் என ஒரு பக்காவான த்ரில்லர் படங்களை யாராலும் மிஸ் பண்ண முடியாது.

மலையாள திரையுலகில் கமர்ஷியல் படங்களை காட்டிலும், த்ரில்லர் ஜானரில் சமூக பொறுப்புள்ள கதையம்சம் கொண்ட படங்கள் தான் அதிகம் ரிலீஸ் ஆகிறது. இதுபோன்ற படங்களை ஓடிடியில் ரசிகர்கள் விரும்பி ரசித்து பார்க்கின்றனர். அந்த வரிசையில் உங்களுக்கு க்ரைம் த்ரில்லர் படம் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த மலையாள படத்தை ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பாருங்கள்.

RekhaChithram Thriller Asif Ali

ரேகா சித்திரம்: இயக்குநர் டி சாக்கோ இயக்கத்தில் ஆசிப் அலி, அனஸ்வரா, இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் சிஹாப், சித்திக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ரேகா சித்திரம் திரைப்படம் கடந்த மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கிஷ்கிந்தா காண்டம் படத்தை தொடர்ந்து ஆசிப் அலி நடித்த த்ரில்லர் படமாக இது இருந்தது. நடிகர் ஆசிப் அலியின் கதை தேர்வு மலையாள ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும், இப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியடைந்து பாக்ஸ் ஆஃபிஸில் 50 கோடி வசூலை ஈட்டியுள்ளது. மேலும், கூடுதல் பலமாக நடிகர் மம்மூட்டி, மனோஜ் கே ஜெயன்,சாய்குமார், ஜெகதீஷ் ஆகியோர் கெளரவ தோற்றத்தில் இடம்பிடித்தனர்.

40 வருட கொலை வழக்கு: ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை அறிய, சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் அதிகாரி கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. ஆனால், ஒரு கொலைக்கு பின்னால் இருக்கும் சதிகளை வீழ்த்துவதும், கொலையாளி யார், கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் சாதாரண வழக்கை போல் ஆரம்பத்தில் காட்சி அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், இந்த கொலை தற்போது நடந்தது அல்ல, 40 வருடங்களுக்கு முன் நடந்தது என்று தெரியவரும்போது போலீசாக நடித்துள்ளா ஆசிப் அலி மிரண்டு போகிறார்.

50 கோடி வசூலை ஈட்டிய ரேகா சித்திரம்: 2 மணி நேரம் 19 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை அளித்துள்ளது என்றே கூறலாம். படம் ரிலீஸ் ஆன முதலே சுமாரான வரவேற்பை பெற்றாலும் இப்படம் ரூ.50 கோடி வசூலை செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமமே அதிகாரப்பூர்வ தகவலை அளித்துள்ளது. மாஸ் ஹீரோக்களுக்கு வரும் வசூலை காட்டிலும் சாதாரண மலையாள படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது என மலையாள சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

மார்ச் 14ஆம் தேதி ஓடிடி ரிலீஸ்: ரேகா சித்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்படம் ஐம்டிபி-யில் 8.6 தர மதிப்பை பெற்றுள்ளது. ஒரு தரமான த்ரில்லர் படத்திற்கான மதிப்பையும் பெற்றுள்ளது. வழக்கமான கொலை வழக்காக இல்லாமல், திருப்பங்கள் நிறைந்த காட்சிகள், யூகிக்க முடியாத திரைக்கதையால் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் ஆதரவை பெற்ற ரேகா சித்திரம் மார்ச் 14ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

ஒரு பக்காவான க்ரைம் த்ரில்லர் கதையை பார்க்க நினைப்பவர்களுக்கு விறுவிறுப்பான காட்சியுடன் திரை விருந்து காத்திருக்கிறது. இப்படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X