Thundu movie review: பிஜு மேனனுக்கு இப்படி ஒரு முகமா? “பிட்” பேப்பரால் கதாநாயகன் ஜெயித்தாரா? தோற்றாரா?
சென்னை: "துண்டு" (Thundu). "ரியாஸ் ஷெரீப்" இயக்கிய மலையாள திரைப்படமான துண்டு திரைப்படத்தில் "பிஜு மேனன்" கதாநாயகனாக "பேபி" என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் ரியாஸ் ஷெரீப் தான் எழுதி இருக்கிறார். "ஆஷிக் உஸ்மான்" இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். அவர் "ஜிம்ஷி காலித்"துடன் புரொடக்ஷன் மற்றும் தயாரிப்பையும் செய்துள்ளார்.
துண்டு திரைப்படம் பிப்ரவரி 16, 2024 திரையரங்கில் வெளியாகி இருந்த நிலையில் ஓடிடி தளத்தில் நெட்பிளிக்ஸ் (Netfix) 2024 மார்ச் 15ல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரைப்படங்களில் அதிகமாக கொலை, துப்பாக்கி சத்தம், அரிவாள், ரத்தம் என்று அதிகமாக இருப்பதாலேயே கண்களுக்கு குளுமையான இயற்கையோடு யதார்த்தமாக இருக்கும் மலையாள திரைப்படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான துண்டு திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
நெட்பிளிக்ஸில் டாப் ஒன் இடத்தில் இருக்கும் துண்டு திரைப்படத்தில் கதாநாயகனாக பிஜு மேனன் பேபி கேரக்டரில் நடிக்கிறார். பிஜு மேனன் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் நிலையில் ஸ்டேஷனில் அவரை விட உயர் பதவியில் இருக்கும் "ஷிபி" "(ஷைன் டாம் சாக்கோ) இடையே இருக்கும் மோதல் மற்றும் இருவருக்கும் இடையில் இருக்கும் சண்டைகளின் காரணமாகவே கதை நகரத் தொடங்குகிறது.
திரைப்படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே பிரமிக்க வைக்கும் அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர். ஒரு பள்ளியில் எக்ஸாம் நடக்கிறது அப்போது அங்கு ஒரு மாணவனையே எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பில்டபுக்கு பிறகு எக்ஸாம் ஹாலுக்குள் வரும் அந்த மாணவர் எல்லா மாணவர்களுக்கும் "பிட்டு" பேப்பரை சப்ளை செய்கிறார். பிறகு அவரும் பிட் அடித்து எக்ஸாம் எழுதிக் கொண்டிருக்கும்போது அங்கிருக்கும் டீச்சரிடம் மாட்டி விடுகிறார்.

அந்த மாணவர் தான் பேபியின் மகன். ஒரு போலீஸ் ஆபிசரின் மகன் பிட் அடித்து விட்டார் என்று தலைமை ஆசிரியர் கூப்பிட்டு மிரட்டி அனுப்புகின்றனர். ஆனால் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பேபி தான் உயர் பதவி அடைய வேண்டும் என்பதற்காக பிட் அடிக்கிறார். அவரும் தன்னுடைய மகனைப் போலவே மாட்டினாரா? இல்லையா? அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
பொதுவாக பொழுதுபோக்கு என்றால் என்ன வேணாலும் கதையை எடுக்கலாம் என்று எண்ணம் எல்லா மொழிகளிலும் இருக்கிறது என்பது இந்த திரைப்படத்தின் மூலமாக தெரிகிறது. ஒரு வில்லன் என்ன செய்தாலும் கடைசியில் திருந்தி மன்னிப்பு கேட்டால் தான் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகனே தப்பான பாதையில் வெற்றியை அடைய பார்க்கிறார்.
ஆனால் வெற்றி அடைந்தாரா? இல்லையா? என்பதை திரைப்படத்தில் பார்க்கலாம். அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் காமெடி கலந்த திரில்லர் என்று இருந்த நிலையில், இதில் காமெடி எங்கே இருக்கிறது என்று தான் தேட வேண்டியது இருக்கிறது. படம் ஆரம்பித்து தொடங்கிய முதலில் இருந்தே பிஜு மேனன் முகத்தில் ஒரு இறுக்கம் தான் இருக்கிறது.
அவர் எதை செய்தாலும் அதில் தோல்வி தான் அடைகிறார்... தன்னை அவர் முழுமையாக நம்பவில்லை என்பது அதற்கு ஒரு காரணமாக கூட இருக்கலாம். ஆனால் ஒருத்தன் எதைத் தொட்டாலும் இப்படியா ஆகணும் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கும். ஆரம்பத்தில் திரைப்படத்தில் இருந்த வேகமும் எதிர்பார்ப்பும் கதை தொடங்கிய சில நிமிடங்களிலே காணாமல் போய்விடுகிறது என்பது திரைப்படத்தின் குறைகளில் ஒன்றாகும்.
அதே நேரத்தில் கதையை இழுக்க வேண்டும் என்று சம்பந்தம் இல்லாத கதை எல்லாம் சேர்த்தது போலத்தான் இருக்கிறது. நாய் கர்ப்பமாக இருப்பது, பேபி ஆயுதப் படைக்கு மாற்றப்படுவது, அங்கு வரும் நண்பர்கள் என்று கதை எப்படியோ போய்க்கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் பிஜு மேனன் பல விதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தில் தான் போலீஸ் கேரக்டரில் நடித்தாலும் பெரியதாக எந்த எக்ஸ்பிரஷனையும் காட்டவில்லை. காப்பி அடித்து எக்ஸாம் எழுதுவதற்கு மட்டும் பல டெக்னிக் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி திரைப்படத்தில் பெரிய அளவில் சுவாரசியங்கள் எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications