OTT - Kaathal The Core: மம்மூட்டி, ஜோதிகா நடித்த போல்டான படம்.. காதல் தி கோர் ஓடிடி ரிலீஸ் எப்போ?
சென்னை: மலையாள இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்த காதல் தி கோர் கடந்த நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியானது. அந்த படத்துக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓரினச் சேர்க்கை கான்செப்ட் என்பதால் சில எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் கிளம்பின. இந்நிலையில், அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை சற்று முன் மம்மூட்டி வெளியிட்டுள்ளார்.
மம்மூட்டி கம்பெனியில் பல படங்கள் அதிரடியாக தயாராகி தியேட்டரிலும் ஓடிடியிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. சிபிஐ 5 தி பிரைன், ரோர்ஷா, கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வந்த இந்த படங்களுக்கு பெரும் வரவேற்பு ஓடிடியில் கிடைத்தன. இந்நிலையில், அடுத்து காதல் தி கோர் திரைப்படம் ஓடிடிக்கு வருகிறது.

ஓடிடியில் ஓடும் மலையாள படங்கள்: கேரள ரசிகர்களை தாண்டி மலையாள படங்களை மற்ற மொழி ரசிகர்கள் அதிகமாக தியேட்டருக்கு சென்றெல்லாம் பார்ப்பது இல்லை. ஆனால், ஓடிடியில் வெளியாகும் மலையாள படங்களை ஓடிடியில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து ரசித்து வருகின்றனர். பசில் ஜோசப்பின் ஜெய ஜெய ஜெய ஜெயஹே கடந்த ஆண்டு வெளியான ஃபாலிமி உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மம்மூட்டி படங்களை பற்றி சொல்லவே வேண்டாம் அனைத்து படங்களையும் ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து விடுகின்றனர்.
காதல் தி கோர் ஓடிடி ரிலீஸ்: தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜோ பேபி இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான காதல் தி கோர் படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். அந்த படம் இன்று இரவு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகப் போவதாக தற்போது மம்மூட்டி ட்வீட் போட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளார்.
ஹாய் நான்னாவுக்கு போட்டி: இன்று காலையில் தான் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நானி, மிருணாள் தாகூர் நடித்த ஹாய் நான்னா படம் வெளியானது. இந்நிலையில், அதற்கு போட்டியாக அமேசான் பிரைமில் காதல் தி கோர் படத்தை வெளியிடுகின்றனர். இந்த வாரம் பெரிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாத நிலையில், ரசிகர்கள் ஓடிடியில் ஜாலியாக இந்த இரு படங்களை பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











